நாளுக்கு நாள் பெட்ரோல் விலை ஏறுவதை விட தமிழ் சினிமாவில் நடிகர்களின் சம்பளம்தான் அதிகமாகிக் கொண்டு செல்கிறது. ஏதாவது ஒரு படம் வெளியாகி விட்டால் உடனே சம்பளம் ஏற்றுவது, இல்லையென்றால் ஏதாவது ஒரு படத்திற்கு வரவேற்பு அதிகமாகிவிட்டால் உடனே தயாரிப்பாளரிடம் பணத்தைக் அதிகப்படியாக சம்பளம் கேட்பது என தொடர்ந்து பல நடிகர்களும் சேட்டைகளை செய்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் படக்குழுவினர் பட்டுள்ளனர். மேலும் நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் தற்போது படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஒரு பக்கம் தயாரிப்பாளர்கள் சந்தோசமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் சிவகார்த்தியன் செய்வது சரியல்ல என பல தயாரிப்பாளர்களும் கூறிவருகின்றனர். அதாவது டாக்டர் படத்திற்கு சிவகார்த்திகேயன் 25 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். ஆனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பார்த்துவிட்டு தற்போது நடித்து வரும் டான் படத்திற்கு லைக்கா நிறுவனத்திடம் 35 கோடி சம்பளம் கொடுத்தால்தான் நடிப்பேன் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட தயாரிப்பாளர் முதலில் 25 கோடி வரை சம்பளம் சொன்னீர்கள் தற்போது 35 கோடி சம்பளம் கேட்கிறீர்கள் என கேட்டதற்கு. சிவகார்த்திகேயன் அப்போது டாக்டர் படத்தின் வரவேற்பு இவ்வளவு இருக்கும் என எனக்கு தெரியாது. ஆனால் தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதனால் நான் நடித்த டான் படத்திற்கும் அதிகமான எதிர்பார்ப்பு இருக்கும் அதனால் எனக்கு 35 கோடி சம்பளம் கொடுங்கள் என கேட்டுள்ளார்.
இதனை கேட்ட தயாரிப்பாளர் வேறுவழியின்றி தருகிறேன் என சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் தற்போது சிவகார்த்திகேயன் வைத்து கலைப்புலி எஸ் தாணு, ஏஜிஎஸ் மற்றும் ஐசரி கணேஷ் போன்ற பெரிய நிறுவனங்கள் சிவகார்த்திகேயன் வைத்து படங்கள் தயாரிக்க காத்திருக்கின்றனர். அதனால்தான் சிவகார்த்திகேயன் சம்பளம் ஏற்றி உள்ளதாக கூறி வருகின்றனர்.
மேலும் தனுஷும் இதேபோல்தான் ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் கொஞ்சம் கூட யோசிக்காமல் சம்பளத்தை ஏற்றி விடுவார். தற்போது அதேபோல்தான் சிவகார்த்திகேயனும் நாம் நல்லா இருந்தால் போதும் என்பதற்காக சம்பளத்தை ஏற்றி விட்டார் என சில தயாரிப்பாளர்கள் விழி பிதுங்கிய உள்ளனர்.