ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

இப்ப என் ரேஞ்சி வேற சார்.. சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்.. ஆடிப்போன தயாரிப்பாளர்கள்

அமரன் படத்தை தொடர்ந்து ஏறுமுகம் தான் சிவகார்த்திகேயனுக்கு. அதுவும் எந்த நேரம் தளபதி துப்பாக்கியை பிடிங்க சிவா என்று கூறினாரோ.. அப்போது முதல் சிவகார்த்திகேயனுக்கு பெரும் ஆதரவு குரல்கள் எழுகிறது. இந்த நிலையில், மினிமம் guarantee நாயகனாக மாறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக சுதா கொங்காரா படத்தில் நடிக்கவிருக்கிறார். வரும் டிசம்பர் 21-ஆம் தேதி ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்க்கு நடுவில் சிபி சக்கரவர்த்தி படம் வேறு உள்ளது.

சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்..

மேலும், வெங்கட் பிரபு படம் வேறு உள்ளது, அது எப்போது தயாராகும் என்றும் தெரியவில்லை. இப்படி இருக்க, தனது அடுத்த படங்களுக்கு சம்பளத்தை தாறு மாறாக உயர்த்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அமரன் பட வெற்றியை தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளார். இதை கேட்ட தயாரிப்பாளர்கள் எல்லாம் ஆடி போய்விட்டார்கள்.

அடுத்த படத்துக்கு சிவகார்த்திகேயன் 50 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார். இது தனுஷ் மற்றும் சூர்யா வாங்கும் சம்பளமாக உள்ளது. அதுமட்டுமின்றி, இதை தொடர்ந்து விக்ரமும் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

நேற்று வந்தவர்களே, இவ்வளவு சம்பளம் வாங்கும்போது, பல ஆண்டுகளாக கடின உழைப்பு போட்டு நடிக்கும் நடிகர் எப்படி வாங்காமல் இருப்பார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அமரன் படம் சிறந்த கதை. அந்த படத்தின் வெற்றி மிகப்பெரிய விஷயமாக இருந்தாலும் கூட, அது கன்டென்ட் value உள்ள படமாக உள்ளது. அடுத்து சிவகார்த்திகேயன் படமும் மினிமம் 150 கொடியாவது வசூல் செய்தால் தான், இவரது இந்த சம்பளம் தயாரிப்பாளர்களுக்கு நியாயமாக படும்.

Trending News