வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கடைசி படத்துல என்னைய வச்சா சம்பவம் செய்யணும்.. உதயநிதியால் கொலவெறியில் சிவகார்த்திகேயன்

Actor Sivakarthikeyan: டாக்டர், டான் போன்ற படங்களில் 100 கோடி வசூலை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன், அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் அனுதீப்பை நம்பி நடித்த பிரின்ஸ் படம் படுதோல்வியாக அமைந்தது. இதனால் அடுத்ததாக அவர் மலை போல் நம்பி இருக்கும் படம் தான் மாவீரன்.

அஸ்வின் மடோன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் அதிதி சங்கர் இணைந்து நடித்த இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தான் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் டிஸ்ட்ரிபியூஷன் செய்கிறார். இதனால் வரும் ஜூலை 14ஆம் தேதி ரிலீசாக இருக்கும் மாவீரன் படத்திற்காக உதயநிதி செய்திருக்கும் வேலையை கேட்ட பின்பு சிவகார்த்திகேயன் கொலை வெறியில் இருக்கிறார்.

Also Read: தூக்கிவிட்டதற்கே துரோகம் செய்த சிவகார்த்திகேயன்.. எந்த காலத்திலும் அவர் கூட கூட்டணி போட மாட்டேன்

ஏற்கனவே உதயநிதியால் தான் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளி போனது. ஏனென்றால் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் உதயநிதி இனி முழு அரசியல்வாதியாக மாறப்போவதால் அவருடைய கடைசி படமான மாமன்னன் படத்திற்கு எந்த பங்கமும் வரக்கூடாது என மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டார்.

இதனால் உதயநிதி திட்டமிட்டபடி ஜூன் 29ஆம் தேதி மாமன்னன் வெளியாகி தற்போது வரை ஓடிக்கொண்டிருக்கிறது. இது வரை படத்தின் வசூல் 42 கோடியை தாண்டுகிறது. இந்தப் படத்தை வெளியிடும் பொழுது பெரிய நடிகர்கள் படத்திற்கு சமமாக 800 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்பொழுது மாவீரன் படம் வெளியாக இருக்கிறது, அதற்கு குறைந்த அளவில் திரையரங்குகளை உதயநிதி ஒதுக்கியுள்ளார். மாவீரன் படத்துக்கு 300 தியேட்டர் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Also Read: சிவகார்த்திகேயனால் கைவிடப்பட்ட இயக்குனர்.. கால்ஷீட் கொடுத்து லாக் செய்த ஆர்ஜே பாலாஜி

பாதிக்கு பாதி கூட ஒதுக்காமல் இருப்பது என்ன நியாயம், கடைசி கடைசியாக சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக நான் தான் கிடைத்தனா என்றும் சிவகார்த்திகேயன் கடுமையான கோபத்தில் இருக்கிறார். மிகக் குறைந்த தியேட்டர்கள் மட்டுமே மாவீரனுக்கு ஒதுக்கிவிட்டு மீதி உள்ள மற்ற தியேட்டர்களில் மாமன்னன் படத்தை எடுக்காமல் ஓட்ட வேண்டும் என கூறியுள்ளார்களாம். ஆளே இல்லாமல் வெறும் படத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.

எப்படியாவது இறுதியாக மாமன்னன் படத்திற்கு 100 கோடி வசூல் என காட்டி தன்னுடைய கடைசி படம் மிகப்பெரிய வெற்றி படம் என்று கூற வேண்டும் என்ற கணக்கில் உதயநிதி இந்த வேலையை செய்து வருகிறார். இதனால் சற்றும் எதிர்பார்க்காத சிவகார்த்திகேயன் மனமுடைந்துள்ளார். இவர் மாவீரன் படத்தை பெரிதும் எதிர்பார்த்து உள்ளார். அந்த படத்திற்கு குறைந்த அளவு தியேட்டர் ஒதுக்கி இருப்பது செம கடுப்பில் இருக்கிறார் எஸ்கே.

Also Read: சிவகார்த்திகேயன் போல் வளர வேண்டிய நடிகர்.. கேடு கெட்ட பழக்கத்தினால் இடம் தெரியாமல் போன பரிதாபம்

Trending News