திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

800 கோடி பட்ஜெட்டில் சிவகார்த்திகேயனின் 5 படங்கள்.. பொங்கல் பண்டிகையை குறி வைத்த அயலான்

Sivakarthikeyan: இப்போது அசுர வளர்ச்சி அடைந்து வரும் ஹீரோ சிவகார்த்திகேயன். டாக்டர், டான் என தொடர் வெற்றி கொடுத்த நிலையில் பிரின்ஸ் படம் ஒரு சிறிய சறுக்கல் கொடுத்திருந்தது. அதிலிருந்து மாவீரன் என்ற வெற்றிப் படத்தை கொடுத்து மீண்டும் தனது இடத்தை சிவகார்த்திகேயன் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சூழலில் கிட்டத்தட்ட 800 கோடி பட்ஜெட்டில் சிவகார்த்திகேயனின் அடுத்த ஐந்து படங்கள் உருவாக இருக்கிறது. அதன்படி பல வருடங்களாக சிவகார்த்திகேயனின் அயலான் படம் உருவாகி வந்தது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் வெளியாக இருக்கிறது.

Also Read : 300 கோடி பட்ஜெட், சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்.. உடும்பு பிடியாக பிடித்த இயக்குனர்

மேலும் சயின்ஸ் படமாக  உருவாகி உள்ள நிலையில் கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 21 வது படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார்.

மேலும் இப்படத்தை கமல் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்க இருக்கிறார். அடுத்ததாக இன்று ஏஆர் முருகதாஸின் பிறந்த நாள் அன்று சிவகார்த்திகேயனுடன் கூட்டணி போடும் அறிவிப்பு வெளியானது. தெலுங்கு தயாரிப்பாளர் இந்த படத்தை தயாரிக்க உள்ள நிலையில் கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் சிவகார்த்திகேயனின் 23 வது படம் உருவாக இருக்கிறது.

Also Read : தோல்வியால் அடுத்தடுத்து விழுந்த மரண அடி.. விஜய், அஜித் பட இயக்குனரை தூக்கி விடும் சிவகார்த்திகேயன்

அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் நகைச்சுவை கலந்த படமாக ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். லியோ படத்தை முடித்த கையுடன் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் முடிந்த பிறகு வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனின் படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த படமும் கிட்டத்தட்ட 150 கோடி பட்ஜெட்டில் தான் உருவாக இருக்கிறது. இது தவிர பாலிவுட் படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்த படம் எப்படியும் 200 கோடியை தாண்டிய பட்ஜெட்டில் தான் உருவாகும் என்று கூறப்படுகிறது. மேலும் பேச்சு வார்த்தை முடிந்த பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

Also Read : சிவகார்த்திகேயன், தனுஷ் போல பேராசைப்படாமல் காய் நகர்த்தும் ஹீரோ.. கையில் இருக்கும் ஒரு டஜன் படங்கள்

Trending News