வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அரை டஜன் படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்.. ஆறின கஞ்சி பழங் கஞ்சிதான்

Actor Sivakarthikeyan : டாப் ஹீரோக்கள் வருஷத்திற்கு ஒரு படம் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ள நிலையில் தற்போது உள்ள இளம் நடிகர்கள் அதிக படங்களின் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதி தான் அதிக படங்களில் நடித்து வரும் நிலையில் அவருக்கு போட்டியாக இப்போது சிவகார்த்திகேயன் கைவசம் அரை டஜன் படங்கள் இருக்கிறது.

கமலின் ராஜ்கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்கை வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

கோடை விடுமுறைக்கு இப்படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடந்த நிலையில் படப்பிடிப்பு தாமதமாவதால் ஆகஸ்ட் 15 வெளியாகிறது.

இதைத்தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் எஸ்கே 23 படத்தின் படப்பிடிப்பும் மும்மரமாக நடந்து வருகிறது. அதோடு இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

இவ்வாறு பல படங்கள் இருக்கும் நிலையில் மோட்டார் மோகனுடன் கூட்டணி போடுகிறார். அதாவது சமீபத்தில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் மணிகண்டனின் குட் நைட் படத்தை இயக்கியவர் விநாயக் சந்திரசேகரன்.

முதல் படத்திலேயே ரசிகர்களின் பாராட்டை பெற்ற அவர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தை இயக்க இருக்கிறார். மேடம் குட் நைட் படத்தை போலவே இதுவும் குடும்பங்கள் கொண்டாடும் நகைச்சுவை படமாக எடுக்க உள்ளார்.

இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாக உள்ளது. மேலும் பிரின்ஸ் மற்றும் அயலான் என தொடர்ந்து சறுக்களை சந்தித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Trending News