ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சர்ச்சை இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்.. அடுத்த 100 கோடி வசூலுக்கு பக்கா பிளான்

சின்னத்திரையில் இருந்த கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது அபரிதமான வளர்ச்சி அடைந்துயுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து சிவகார்த்திகேயன் படங்களுக்கு மக்கள் மத்தியில் இருந்து பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது.

சமீபத்தில் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், சமுத்திரகனி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் வெளியான டான் படம் வசூலை வாரி குவித்தது. படம் வெளியாகி மிகக்குறுகிய காலத்திலேயே 100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி மற்றும் மடோன் அஸ்வின் ஆகிய இயக்குனர்களின் படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்கயுள்ளார்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கினிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஞ்சாதே, முகமூடி, துப்பறிவாளன் என வித்தியாசமான கதைகளை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் மிஷ்கின். சமீபகாலமாக பட விழா மேடையில் அநாகரிகமாக பேசி சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளார். இதனால் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்களும் தயங்குகின்றனர்.

தற்போது மிஷ்கின் ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் மிஷ்கின் நடித்துள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன், மிஸ்கின் கூட்டணியில் படம் வெளியானால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Trending News