டாக்டர் மற்றும் அயலான் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பிரம்மாண்ட படங்களை தயாரித்த நிறுவனம் தயாரிக்க உள்ளது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காமெடி ஹீரோவாக சினிமாவில் நுழைந்து தற்போது கமர்சியல் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஒரு படம் தோல்வி அடைந்தாலும் சுதாரித்துக்கொண்டு அடுத்த படமே வெற்றிப்படமாக கொடுத்து விடுகிறார்.
அந்த வகையில் மிஸ்டர் லோக்கல், ஹீரோ போன்ற தோல்விப் படங்களை கொடுத்தாலும் நம்ம வீட்டு பிள்ளை படம் அவருக்கு இரட்டை லாபத்தை கொடுத்தது. இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் கூட சிவகார்த்திகேயனுடன் படம் செய்ய ஆர்வமாக இருக்கின்றனர்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டாக்டர் படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து அயலான் படம் 2021 கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளதாம். மேலும் ரஜினியின் 2.o, தர்பார் போன்ற படங்களை தயாரித்த லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம் சிவகார்த்திகேயன்.
பெரும்பாலும் அந்த படத்தை விஜய்க்கு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அட்லீயின் உதவி இயக்குனர் தான் அந்த படத்தை இயக்கப்போகிறார் எனவும் ஒரு பக்கம் தகவல்கள் கசிந்துள்ளன.
எது எப்படியோ முருகதாஸ் படம், அப்படி அது கைகூட வில்லை என்றால் முதல்முறையாக இரட்டை வேடத்தில் அட்லீ உதவி இயக்குனர் இயக்கும் படம் என்பதை உறுதி செய்து விட்டாராம் சிவகார்த்திகேயன். கடந்த எட்டு வருடத்தில் சிவகார்த்திகேயனின் இந்த அபார வளர்ச்சி அனைவருக்குமே ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாம்.