வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

இது 25வது படம், கொஞ்சம் ஸ்பெஷலா வேணும்னு எஸ்கே விரித்த வலை.. விஜய் இயக்குனருடன் போட்ட அஸ்திவாரம்

Sivakarthikeyan 25th Movie: சினிமாவை தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்த சிவகார்த்திகேயன் தற்போது நெனச்சு பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்து விட்டார். அதற்கு காரணம் ஒவ்வொரு படத்திலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களை கவரக்கூடிய விஷயங்களை நோக்கி பயணித்ததால் மட்டுமே.

அப்படி வந்ததால் தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக டாப் 10 இடத்திற்கு வந்து விட்டார். இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் அமரன் படத்தில் நடித்த வருகிறார். 200 கோடி பட்ஜெட்டில் இதுவரை எடுக்காத முயற்சியாக ராணுவ வீரர் கதையில் நடித்து வருகிறார்.

இப்படத்தை ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் பண்ணலாம் என்று முடிவு எடுத்து அதற்கான வேலைகளை பார்த்து வருகிறார்கள். இதற்கு அடுத்தபடியாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தை பண்ணப் போகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த நிலையில் இவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் கமிட் ஆகியுள்ளார்.

வழக்கம் போல் இப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கப் போகிறார். மேலும் இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து SK24 படத்தை இவருடைய நண்பர் சிபி சக்கரவர்த்தியுடன் இணையப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளிவந்த டான் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் எஸ்கே 24 ஆவது படமும் வெற்றி பெறும் என்று மனநிலையில் இருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக SK25 படத்திற்கும் அஸ்திவாரத்தை போட்டு வருகிறார்.

தந்திரமாக செயல்பட்ட எஸ்கே

அந்த வகையில் விஜய் இயக்குனருக்கு வலை விரித்து இருக்கிறார். அதாவது சிவகார்த்திகேயனுக்கு 25 ஆவது படம் ரொம்பவே ஸ்பெஷலாக வேண்டுமாம். அதனால் எந்த இயக்குனரை லாக் செய்யலாம் என்று நினைக்கும் பொழுது விஜய்யின் ஃபார்முலாவை பயன்படுத்தலாம் என்று வெங்கட் பிரபுவுக்கு தூது விட்டிருக்கிறார்.

இது சம்பந்தமாக வெங்கட் பிரபுவும் ஏற்கனவே சிவகார்த்திகேயனிடம் கதையெல்லாம் கூறியிருக்கிறார். அந்த வகையில் எஸ்கே இது என்னுடைய 25 வது படம். அதனால கதை இன்னும் தூக்கலாகவே இருக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு வெங்கட் பிரபுவும் அஜித்துக்கு மங்காத்தா, சிம்புக்கு மாநாடு இப்பொழுது விஜய்க்கு கோட் படம் மாதிரி உங்களுக்கு 25வது படம் சில்வர் ஜூப்ளியாக வெற்றி பெற நான் கேரண்டி என்று உத்தரவாதத்தை கொடுத்திருக்கிறார். இதனால் கோட் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த வேலை சிவகார்த்திகேயனுடன் கூட்டணி வைப்பது தான்.

Trending News