வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கமலை டீலில் விட்ட சிவகார்த்திகேயன்.. இதுவர வாங்குன அடி பத்தாவது போல!

சினிமாவில் எந்தவித பின்புறமும் இல்லாமல் படிப்படியாக முன்னேறியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் டாக்டர், டான் போன்ற வெற்றி படங்களை கொடுத்து, அதன் பிறகு சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் வெளியான பிரின்ஸ் படத்தினால் பெரிய அடி வாங்கியது பத்தாது என்று மறுபடியும் தெலுங்கு பிரபலத்தை நம்பி கமலஹாசனை டீலில் விட்டிருக்கிறார்.

தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் பல மாதங்களுக்கு முன்பே பிக் பாஸ் மேடையில் கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக ஒத்துக்கொண்டார். அதனால் சிவகார்த்திகேயன் கமல் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. அதற்கான வேலைகள் நடந்து வந்தன.

Also Read: சிவகார்த்திகேயனின் ரோல் மாடல் யாரு தெரியுமா.! அவரின் அசுர வளர்ச்சிக்கு அடித்தளமே இவர்தானாம்

மாவீரன் படத்தை முடித்துவிட்டு கமல் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது தில்ராஜ் படத்தில் நடிக்க போகிறார். தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் தயாராகிறது. இவருக்கு சம்பளமாக அவர் 28 கோடி வாங்கி இருக்கிறார்.

தெலுங்கில் பிரபலமான தயாரிப்பாளரான தில் ராஜு, தளபதி விஜயின் வாரிசு படத்தை தயாரித்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்கிறார். அதை தொடர்ந்து சிவகார்த்திகேயனியும் வளைத்து போட்டு விட்டார். ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் அதிக செல்வாக்கு கொண்ட தில் ராஜு தற்போது தமிழ் நடிகர்களை குறி வைத்து தட்டி தூக்குகிறார்.

Also Read: அரைச்ச மாவையே அரைத்து புளிச்சு போன 5 இயக்குனர்கள்.. சிவகார்த்திகேயனால் வாழ்க்கையை இழந்த டைரக்டர்

இதனால் டாப் நடிகர்களும் இங்கிருக்கும் தயாரிப்பாளர்களை கழட்டி விடுகின்றனர். அதிலும் சினிமாவை வித்தியாசமான கோணத்தில் பார்க்கும் கமலஹாசன் சிவகார்த்திகேயனை வைத்து புதுவிதமான படத்தை தயாரிக்க நினைத்தார். இதற்கான வேலைகளும் துவங்கப்பட்டன.

ஆனால் இப்போது அதிக சம்பளம் கொடுக்கிறார் என்ற ஒரே காரணத்தினால் சிவகார்த்திகேயன் பணத்திற்காக கமலிடம் கூட சொல்லாமல் இந்த படத்தில் நடிக்கப் போகிறார். கமலின் படத்தில் எப்போது நடிப்பார் என்று தெரியவில்லை. இதனால் கமல், சிவகார்த்திகேயன் மீது கொஞ்சம் வெறுப்புடன் இருக்கிறாராம்.

Also Read: படுதோல்வியால் சம்பளத்தை திருப்பிக் கேட்ட தயாரிப்பாளர்.. நாலாபக்கமும் அடிவாங்கும் சிவகார்த்திகேயன்

Trending News