புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சிவகார்த்திகேயனுக்கு பிடித்த தங்கச்சி ஐஸ்வர்யா ராஜேஷ் இல்லையாம்.. அப்போ யாராக இருக்கும்? புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் நம்ம வீட்டு பிள்ளை.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயன் தங்கச்சியின் மீது அதிகமாக பாசம் வைத்திருப்பார். சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்த காட்சிகள் அனைத்துமே நம் கண்முன் பாசமலர்கள் போலவே தோன்றியது.

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபல பாடகி மகளான சிவாங்கி கோமாளியாக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி செய்யும் சேட்டைகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் தற்போது சிவாங்கிக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.

குக் வித் கோமாளியில் கெஸ்டாக வந்த சிவகார்த்திகேயன், இந்த நிகழ்ச்சிக்கு நான் மிகப் பெரிய ரசிகன் என்றும், சிவாங்கியை பார்க்கும்போது எனக்கு இந்த மாதிரி ஒரு தங்கச்சி கிடைக்கவில்லை என கவலைப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் சிவாங்கியை குழந்தைத்தனமான இருக்கிறார் எனவும் மகுடம் சூட்டினார்.

sivakarthikeyan
sivakarthikeyan

அதுமட்டுமில்லாமல் இந்த மாதிரி குழந்தைத்தனமாக இருக்கும் தங்கச்சி கிடைத்தால் யாருதான் வேண்டாம் என்று சொல்வார்கள் என சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாகவும் கூறி வருகின்றனர்.

Trending News