புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அஜித்தை பார்த்து ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன்.. முழு வீச்சில் செக் வைக்கும் மனைவி

அஜித் ஓரங்கட்டிய பிரபலத்தை சிவகார்த்திகேயனும் ஒதுக்கியதால் ஆத்திரமடைந்த மனைவி, இவர்களுக்கெல்லாம் செக் வைக்கும் வகையில் அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஜித் ஏகே 62 படத்தில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை அதிரடியாக விலக்கியதால் பிறகு அடுத்ததாக இவர் எழுதிய கதைக்கு யார் ஹீரோ என்று யோசித்து வந்தார். பின்னர் இந்த கதைக்கு பிரதீப் ரங்கநாதன் நடிக்க முடிவு  செய்யப்பட்டது. இந்த கதை லைக்கா வேண்டாம் என்று சொல்லிவிட்ட பிறகு பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவனை ஏஜிஎஸ் இடம் அழைத்துச் சென்றுள்ளார்.

Also Read: 10 வயது வித்தியாசமுள்ள நடிகருடன் கூட்டணி போடும் நயன்தாரா.. விக்கியை தூக்கிவிட வேற வழியே இல்ல!

அவர்கள் கதை நன்றாக இருக்கிறது. ஆனால் பிரதீப் ரங்கநாதனுக்கு இவ்ளோ பெரிய பட்ஜெட் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர். ஆனால் இந்த கதையில் சிவகார்த்திகேயன் நடிக்க வைத்தால் நாங்கள் தயார் என்று கூறியுள்ளனர். இந்த கதையை விக்னேஷ் சிவன் மற்றும் ஏஜிஎஸ் சிவகார்த்திகேயனிடம் சொன்னார்கள்.

சிவகார்த்திகேயன் நாசுக்காக வேண்டாம் என்று  சொல்லிவிட்டார். இந்த படத்திற்கு அனிருத் தான் இசை அமைப்பதால் அவரை வைத்துக் கூட விக்னேஷ் சிவன் பேசிப் பார்த்தார். ஆனால் அஜித் ஒதுக்கியவருக்கு நாம் உதவி செய்தால் அதுவே பெரும் உபத்திரமாகிவிடும் என்பதால் அந்தப் பக்கம் கூட திரும்பிப் பார்க்கவே மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.

Also Read: நயன்தாரா புருஷனுக்கு இப்படி ஒரு நிலைமையா?. அனுதாபம் தேடும் விக்னேஷ் சிவன்

இதையெல்லாம் கேள்விப்பட்ட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அந்த படத்திற்கு அவரே கதாநாயகியாக பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து நடிக்க முடிவெடுத்து இருக்கிறார். இந்த செய்தி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. அது மட்டுமல்ல அனிருத்- விக்னேஷ் சிவன்- நயன்தாரா இணைந்த நல்ல டீம் வேண்டாம் என்றது சிவகார்த்திகேயனுக்கு தான் பெரிய நஷ்டம்.

விக்னேஷ் சிவனை அஜித் ஒதுக்கி இருக்கிறார், நாம் இந்த படத்தில் நடித்தால் அஜித் நம்மளை ஒதுக்கி விடுவார். அதனால் அஜித்திற்காக விக்னேஷ் சிவனே வேண்டாம் என்று சிவகார்த்திகேயன் சொல்லிவிட்டார். இவர்களுக்கெல்லாம் செக் வைக்கும் விதமாக தான் 10 வயது வித்தியாசம் உள்ள பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க நயன் முடிவெடுத்து இருக்கிறார்.

Also Read: மகன்களின் அன்புக்கு அடிமையான விக்கி-நயன்.. 4 லட்சம் லைக்களை குவித்த கியூட் புகைப்படங்கள்

Trending News