புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மெரினா படத்தில் நடிக்க இருந்த பிரபல நடிகர்.. இப்ப ஒரு படம் கூட கைவசம் இல்லை என வேதனை

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் மெரினா. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இப்படம் ஓரளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு சிவகார்த்திகேயனுக்கும் பாண்டிராஜுக்கும் இடையே ஒரு நல்ல நட்புறவு ஏற்பட்டது.

அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட சிவகார்த்திகேயன் கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் மீண்டும் கைகோர்த்து தங்களது நட்பை மேலும் வலுப்படுத்திக் கொண்டனர். அதன் பிறகு இவர்கள் இருவரும் தொடர்ந்து மற்றொரு படத்தில் பணியாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறி வருகின்றனர்.

மெரினா திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்காவிட்டாலும், அதன் மூலம்தான் நடிகராக சினிமாவில் அறிமுகமானார். ஆனால் மெரினா முதலில் நடிப்பதற்கு தேர்வானவர் நடிகர் ராமகிருஷ்ணன்.

ramakrishnan
ramakrishnan

ஆனால் அப்போது வேறொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை எனவும், இந்த படத்தை நான் நடித்திருந்தால் எனது திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாக இருந்திருக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும் அதன் பிறகு பாண்டிராஜ் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் சினிமாவை பொறுத்தவரை வெற்றி என்பது ஒருவருக்கு மட்டுமே சார்ந்தது அல்ல, அது எப்ப வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அதனால் பொறுமை அவசியம் கண்டிப்பாக தனக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வருவேன் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என கூறியுள்ளார்.

Trending News