திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சிவகார்த்திகேயன் படத்துல நடிக்க மாட்டேன்.. இயக்குனரை விரட்டி விட்ட முன்னணி நடிகர்

தற்சமயம் தமிழ் சினிமாவில் விஜய் அஜித் ரஜினி சூர்யா ஆகியோருக்குப் பிறகு அதிக மார்க்கெட் உள்ள நடிகர் என்றால் சிவகார்த்திகேயன் தான். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூலை தட்டி தூக்கியது.

மேலும் டாக்டர் படத்தில் நடித்த சிவகார்த்திகேயனை தாண்டி படத்தில் நடித்த அனைத்து சின்ன சின்ன நடிகர்களுக்குக் கூட ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது தான் இந்த படத்தின் வெற்றி என படக்குழுவினர் மகிழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த படத்தின் மூலம் வில்லனாக ஒரு நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் வினய்.

ஒரு காலத்தில் சாக்லேட் ஹீரோவாக வலம் வந்தவர் மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் வில்லனாக அறிமுகமாகி வரவேற்ப்பை பெற்று டாக்டர் படத்தின் மூலம் முன்னணி வில்லன் நடிகராக மாறியுள்ளார். ஒரு பிரபல ஹீரோவை வில்லனாக போட்டது படத்திற்கு பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆகியுள்ளது.

இதை கருத்தில் கொண்டு உள்ள சிவகார்த்திகேயன் அடுத்து அடுத்து தான் நடிக்கும் படங்களில் பிரபல நடிகர்களை வில்லனாக நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறாராம். அந்தவகையில் தெலுங்கு நடிகர்கள் சிலரிடம் தனக்கு வில்லனாக நடிக்கும் படி கேட்டுள்ளார் சிவகார்த்திகேயன். ஆனால் வாய்ப்பு இல்ல ராஜா என திருப்பி அனுப்பி விட்டார்களாம்.

தற்போது அது போக வண்டியை பாலிவுட் பக்கமும் திரும்பி விட்டார்களாம். ஆனால் யாருமே சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க ரெடியாக இல்லை. இது கொஞ்சம் சிவகார்த்திகேயன் தரப்பை அப்செட் ஆகி உள்ளது.

ஒரு பிரபல நடிகர் வில்லன் என்றால் அந்த படத்தின் மார்க்கெட்டும் வியாபாரமும் இரண்டுமடங்கு பெரியது ஆகும் என கணக்கு போட்ட சிவகார்த்திகேயன் கனவில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார்களாம். போற பக்கமெல்லாம் இயக்குனரை விரட்டியடிப்பதையே வேலையாக வைத்துள்ளார்கள் மற்ற நடிகர்கள்.

Trending News