வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

Kurangu Pedal: சிவகார்த்திகேயனின் புதிய முயற்சி ஜெயிக்குமா.! குரங்கு பெடல் ட்ரெய்லர் எப்படி இருக்கு?

Kurangu Pedal Trailer: ஹீரோ என்பதை தாண்டி சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றுள்ளார். அப்படி அவருடைய தயாரிப்பில் உருவாகி இருக்கும் குரங்கு பெடல் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

கமலக்கண்ணன் இயக்கத்தில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சந்தோஷ் வேல்முருகன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் சம்மர் ஸ்பெஷலாக வரும் 3ம் தேதி வெளியாக உள்ளது. இதன் ஆரம்பத்திலேயே விளையாட்டு பீரியடை கணக்கு பீரியடுக்கு மாற்றி தருவது மனிதத் தன்மையற்ற செயல் என்ற வசனத்தோடு தொடங்குகிறது.

சிவகார்த்திகேயனின் புதிய முயற்சி

அதைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை விடுகிறது. அங்கு ஆரம்பிக்கிறது அவர்களுடைய சேட்டை. நாள் முழுக்க வெளியில் விளையாடி அப்பாவிடம் அடி வாங்குவது என அலப்பறையாக இருக்கிறது ட்ரெய்லர்.

அதேபோல் ஒரு வாண்டு வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு ஓட்டி பழகுகிறது. அதற்காக வீட்டில் திருடி அடி வாங்குவது என 90ஸ் கிட்ஸ் அனுபவத்தை அப்படியே கண்முன் காட்டி இருக்கிறார் இயக்குனர்.

இப்படியாக வெளிவந்திருக்கும் ட்ரெய்லர் ரசிக்கும் வகையில் இருக்கிறது. அதேபோல் அந்த கிராமத்தின் அழகும் குழந்தைகளின் எதார்த்தமான நடிப்பும் நிச்சயம் பேசப்படும்.

Trending News