சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர்களில் இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்றால் சந்தேகம்தான். காமெடி நடிகராக சந்தானம் தொட்ட உயரத்தை ஹீரோவாக சிவகார்த்திகேயன் தொட்டு விட்டார்.
சிவகார்த்திகேயன் கமர்சியல் படங்கள் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் கமர்சியல் படங்கள் செய்தால் மட்டும்தான் கல்லா கட்ட முடிகிறது. மாறாக அவர் வேறு முயற்சி செய்த பல படங்கள் தோல்வியைத்தான் சந்தித்துள்ளன.
இதனால் நமக்கு காமெடி கமர்ஷியல் படங்கள்தான் செட்டாகும் என்பதில் தெளிவாக இருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து டான், சிங்கப்பாதை போன்ற படங்களில் கமர்சியல் அம்சங்கள் வழக்கம் போல் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் தெலுங்கில் 4 கோடியில் உருவாகி 70 கோடி வசூல் செய்த ஜாதி ரத்னலு என்ற படத்தை இயக்கிய அனுதீப் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்த படத்திற்கு சம்பளம் வாங்காமல் தமிழ் வினியோக உரிமையை கொடுக்கச் சொல்லி உள்ளாராம் சிவகார்த்திகேயன். சம்பளத்தை விட இதில் வருமானம் ஜாஸ்தி என்பதால் இதை முடிவு செய்துள்ளாராம்.
ஒருவேளை இதில் நன்றாக சம்பாதித்தால் தொடர்ந்து சம்பளத்துக்கு பதிலாக விநியோக உரிமையை வாங்கி வெளியிட முடிவு செய்துள்ளார் எனவும் அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் கிடைத்துள்ளன.