வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சிறுத்தை உடன் இணையும் சிவகார்த்திகேயன்.. பட்டையை கிளப்பும் அதிரடி கூட்டணி

டாக்டர் என்ற ஒற்றை படம் மூலம் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர் சிவகார்த்திகேயன் காட்டில் தற்போது அடைமழை என்று தான் கூற வேண்டும். ஏனெனில் இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அவரின் மார்க்கெட் எகிறி விட்டது. இதனை தொடர்ந்து சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி விட்டார்.

முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்ததால், அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகிறார்களாம். இதனையடுத்து சிவகார்த்திகேயனுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அந்த வரிசையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிப்பதற்கான பணியில் இறங்கியுள்ளாராம். இதற்காக சிவகார்த்திகேயனை அணுகிய கலைப்புலி தாணு இயக்குனர்கள் வெங்கட் பிரபு அல்லது சிறுத்தை சிவா ஆகிய இருவரில் ஒருவரை வைத்து படம் பண்ணலாம் என கூறினாராம்.

இதனை கேட்ட சிவகார்த்திகேயன் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சிவா ரஜினி கூட்டணியில் வெளியான அண்ணாத்த படம் ஓரளவிற்கு நல்ல வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனால் கூட சிவகார்த்திகேயன் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கலாம் என கூறுகிறார்கள். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் எனவும், சிவகார்த்திகேயன் தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்த பின்னர் இப்படத்தில் இணைவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News