இனி Sk என்றால் சிவகார்த்திகேயன் கிடையாது, இந்த இளம் நடிகர் தான்.. ட்விட்டரில் ட்ரென்ட் செய்யும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வந்த நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன்(sivakarthikeyan ). யாருமே எதிர்பார்க்காத உச்சத்தில் தற்போது இருக்கிறார். சிவகார்த்திகேயன் வளர்ச்சியை பார்த்து கோலிவுட்டில் பலருக்கும் வயித்தெரிச்சல் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

சமீபகாலமாக சிவகார்த்திகேயனை அவரது ரசிகர்கள் SK என செல்லமாக அழைத்து வருகின்றனர். பெரும்பாலும் தற்போது சிவகார்த்திகேயன் என்று அழைப்பதை விட SK என்று அழைப்பதையே சிவகார்த்திகேயனும் விரும்புகிறாராம்.

அவருடைய படத்தின் டைட்டில் கார்டு போடும் போது கூட சிவகார்த்திகேயன் பெயரை முதலில் SK என சொல்லிவிட்டு அதன் பிறகுதான் அவருடைய முழு பெயரை போடுகிறார்கள். இது சிவகார்த்திகேயனின் பிளான் தான் எனவும் கூறுகின்றனர்.

முதன்முதலில் SK என ஆரம்பிக்கப்பட்டது என்னவோ ரெமோ படத்தின் டைட்டில் கார்டில் தான். ஆனால் தற்போது சிவகார்த்திகேயனை தாண்டி தமிழிலும் தெலுங்கிலும் பிரபல நடிகராக வலம் வரும் சந்தீப் கிஷன் அவரது ரசிகர்களும் அவரை SK என அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

யாருடா மகேஷ், மாநகரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான சந்தீப் கிஷன் தமிழை விட தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது 28வது படத்திற்கான அறிவிப்பு போஸ்டர் ஒன்று வெளியானது.

இதனை சந்தீப் கிஷன் ரசிகர்கள் #SK28 எனக் கொண்டாடி வருகின்றனர். இதைப்பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் நமக்கு தெரியாமலேயே சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு விட்டாரா என்ற சந்தேகத்தில் சென்று பார்த்தபோதுதான் அது தெலுங்கு நடிகர் என்பது தெரியவந்தது. சமீபகாலமாக தங்களுடைய பெயர்களை சுருக்கி ஸ்டைலாக வைத்துக் கொள்ள பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் அதற்கு விதை போட்டது என்னமோ நம்ம சிலம்பரசன் STR தான்.

#SK28-cinemapettai
#SK28-cinemapettai