Sivakarthikeyan: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு மதராஸி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதன் ஃபர்ஸ்ட் லுக், க்லிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த டைட்டிலில் ஏற்கனவே 2006 ஆம் ஆண்டு அர்ஜுன் நடித்திருக்கிறார். வழக்கம் போல சிவகார்த்திகேயன் மீண்டும் பழைய பட டைட்டிலை தேர்ந்தெடுத்துள்ளார்.
ஏற்கனவே எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, வேலைக்காரன், மாவீரன், அமரன் போன்ற டைட்டிலில் அவர் நடித்துள்ளார். அதை தொடர்ந்து தற்போது சிவாஜி பட டைட்டிலான பராசக்தியில் நடித்து வருகிறார்.
மதராஸி கதை இதுவா.?
இந்நிலையில் மதராஸி பட தலைப்பும் அந்த செண்டிமெண்ட் படி வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் நிச்சயம் இந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் இப்படத்தின் கதை துப்பாக்கி 2 தான் என்ற ஒரு தகவலும் கசிந்து உள்ளது. ஏனென்றால் அந்த வீடியோவில் துப்பாக்கி பட வில்லன் இடம்பெற்றிருந்தார்.
ஏற்கனவே விஜய் துப்பாக்கியை எஸ் கே கையில் கொடுத்துவிட்டார். அதனால் இப்படம் பார்ட் 2 தான் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் வீடியோவை பார்க்கும் போது சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் ஏதோ ஒரு டிஸ்ஆர்டர் பிரச்சனையில் இருப்பது போல் தெரிகிறது.
அதே சமயம் ஆக்ஷன் காட்சிகளும் தெறிக்க விடுகிறது. இதனால் நிச்சயம் யாரும் எதிர்பார்க்காத ஒரு கதைக்களம் தான் என்கின்றனர். எது எப்படியோ இந்த டைட்டில் டீசர் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்துள்ளது.