திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தமிழ் சினிமாவில் யாரும் புரியாத சாதனை.. சிவகார்த்திகேயனின் புது அவதாரம்

சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் உள்ள நிலையில் தற்போது புது அவதாரத்தை எடுத்துள்ளார். சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமான சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் போன்று இவரது நடிப்பில் வரும் திரைப்படங்களும் 100 கோடி வரை வசூல் சாதனை படைக்கும் அளவிற்கு இவருடைய வளர்ச்சி உள்ளது. சமீபத்தில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் வெற்றிப்பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது.

இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்ததன் மூலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளை தன் வசம் ஈர்த்து சிறந்த என்டெர்டன்னராக வலம் வந்துள்ளார். அடுத்ததாக பிரின்ஸ், அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் வரிசையாக வெளிவர உள்ள நிலையில் அப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே தற்போது சிவகார்த்திகேயன் ஓடிடி தளம் ஒன்றை உருவாகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே எஸ்.கே புரோடக்சன்ஸ் மூலமாக கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, டான் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்த சிவகார்த்திகேயன், நெட்பிலிக்ஸ், அமேசான் உள்ளிட்ட ஓடிடி தளங்களை போன்று பிரத்தியேகமான ஒடிடி தளம் ஒன்றை உருவாக்கி உள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் திரையரங்கில் வருவதை விட ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்டு மக்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்க கூடிய வசதியை ஓடிடி நிறுவனங்கள் செய்து வருகின்றனர். இதனை நுட்பமாக அறிந்த சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஓடிடி தளத்தை தன் சொந்த செலவில் உருவாக்கிய நடிகர் என்ற பெருமையை சிவகார்த்திகேயன் பெற்றுள்ளார்.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் உள்ளதையடுத்து, தற்போது ஓடிடி தளத்தையும் உருவாக்கி உள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் இந்த ஓடிடி தளத்தின் பொறுப்புகளை அவரது மனைவி ஆர்த்தி ஏற்று நடத்தவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Trending News