சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

பாலிவுட் ஹீரோயினுடன் ஜோடி போடும் சிவகார்த்திகேயன்.. ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் அனல் பறக்கும் அப்டேட்

Sivakarthikeyan AR Murugadoss Movie Update: வரும் ஜூலை 14 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திற்கு பிறகு, அவர் நடிக்கும் அடுத்த படத்தை குறித்த அனல் பறக்கும் அப்டேட் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. அதிலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை இணைந்திருப்பது அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

அதாவது சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ஆக்சன் என்டர்டைன்மென்ட் படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். தற்போது இந்த படத்திற்கான முதல் கட்ட பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Also Read: அடுத்த மாதம் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள 5 படங்கள்.. சத்திய சோதனையாக வெளிவரும் பிரேம்ஜியின் படம்

இந்த நிலையில் படத்தின் கதாநாயகியாக யாரை தேர்வு செய்யப் போகின்றனர் என பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்த நிலையில், பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான சீதாராமன் படத்தில் மிருணாள் தாக்கூர் சிறப்பாக நடித்ததால் இவருக்கு எக்கச்சக்கமான தமிழ் ரசிகர் கூட்டமும் உள்ளது.

அதுமட்டுமல்ல இவர் சீரியலில் இருந்து சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த நடிகையும் கூட. எனவே திரை உலகில் படிப்படியாக தன்னுடைய வளர்ச்சியை கண்ட பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் தற்போது தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இவரை வைத்து படத்தின் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் வேண்டிய டெஸ்ட் சூட் அனைத்தையும் முடித்துவிட்டார்.

Also Read: ஒரே ஹோட்டலில் மூன்று கதையை முடிக்க உலகநாயகன் போடும் ஸ்கெட்ச்.. தவம் கிடக்கும் இரண்டு நடிகர்கள்

மேலும் இவர் தான் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்துவார் என படக்குழுவினர் உறுதியுடன் இருக்கின்றனர். அதுமட்டுமல்ல சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் இந்த படம் தான் அதிக பட்ஜெட்டில் உருவாகக்கூடிய படமாகவும் இருக்கப்போகிறதாம். இதை விட ஸ்பெஷல் என்னவென்றால், இந்த படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் விதமாக இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அனிருத்- சிவகார்த்திகேயன் இணைந்தாலே அந்த படம் சூப்பர் ஹிட் என்ற நிலையில், இந்த படம் எதிர்பார்ப்பதை விட மாபெரும் ஹிட் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏஆர் முருகதாஸ் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுப்பதால் இந்த படம் நிச்சயம் தரமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு வந்து விட்டது.

Also Read: சிவகார்த்திகேயன் கொடுத்த வாய்ப்பு.. விஸ்வரூப வளர்ச்சி அடைந்த வில்லன் நடிகர்

Trending News