சிவகார்த்திகேயனை அடுத்த விஜய் என்று சொன்னாலும் சொன்னார்கள் தொடர்ந்து விஜய் படத்தில் நடிக்கும் பிரபலங்களை தன்னுடைய படத்திலும் ஒப்பந்தம் செய்து வருகிறார். அந்த வகையில் விஜய்க்கு வில்லனாக நடித்த பிரபல நடிகரை தனக்கும் வில்லன் ஆக்கிவிட்டார் பிரின்ஸ் சிவகார்த்திகேயன்.
தமிழ் சினிமாவில் மிக வேகத்திலேயே முன்னணி நடிகர் ரேஞ்சுக்கு வளர்ந்தவர் தான் சிவகார்த்திகேயன். மற்ற முன்னணி நடிகர்கள் சினிமாவில் இருபது வருடங்களுக்கு மேல் கஷ்டப்பட்டு பெற்ற புகழை வெறும் எட்டு வருடத்தில் பெற்றுவிட்டார் சிவகார்த்திகேயன்.
மேலும் ரஜினி, விஜய் ஆகியோருக்கு பிறகு 6 வயது முதல் 60 வயது வரை ரசிக்கும் ஹீரோவாக மாறி விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர். சிவகார்த்திகேயனின் கதை தேர்வும் அப்படித்தான் இருந்து வருகிறது.
இடையில் சீரியஸ் படங்கள் ட்ரை பண்ணி சொதப்பினாலும் உடனடியாக தன்னுடைய பிளஸ் என்ன என்பதை தெரிந்து கொண்டு உடனடியாக ஒரு எண்டர்டெயின்மெண்ட் படத்தை கொடுத்து தன்னுடைய மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்கிறார்.
சிவகார்த்திகேயனுக்கு ஆரம்பத்திலிருந்தே ரஜினி, விஜய் போன்று ஒரு கமர்சியல் ஹீரோவாக வலம் வரவேண்டும் என்ற ஆசை இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த ஆசைக்கு நியாயமானவர் தான். இதனாலேயே என்னமோ முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் முக்கியமான நடிகர்களை தன்னுடைய படங்களுக்கும் தொடர்ந்து ஒப்பந்தம் செய்து வருகிறார்.
அந்த வகையில் அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் டான் படத்தில் வில்லனாக விஜய்யின் மெர்சல் படத்தில் நடித்த நடிகரும் பிரபல இயக்குனருமான எஸ் ஜே சூர்யாவை ஒப்பந்தம் செய்ய உள்ளாராம்.