சிவகார்த்திகேயனால் கடனில் சிக்கித் தவிக்கும் தயாரிப்பாளர்.. சொத்துகளை விற்க வேண்டிய நிலைமை

ஏற்கனவே சிவகார்த்திகேயன் சொந்த தயாரிப்பில் படம் எடுத்ததாக சொல்லி ரெமோ மற்றும் வேலைக்காரன் போன்ற படங்களின் கடனை அவர் தலையில் கட்டி விட்டனர். இதனால் படத்துக்கு 20 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினாலும் கடன் மட்டும் குறையவே இல்லையாம்.

இந்த நேரத்தில்தான் சிவகார்த்திகேயனை தேடி கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் என்பவர் வந்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்து சில பட வாய்ப்புகளை தருவதாகவும் சிவகார்த்திகேயனின் மொத்த கடனையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும் தலையை விட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனும் தொடர்ந்து கே ஜே ஆர் ராஜேஷுடன் இணைந்து படம் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் அவர்களது கூட்டணியில் இதுவரை வெளிவந்த படங்கள் எதுவுமே பெரிய வெற்றியைப் பெறவில்லை.

சிவகார்த்திகேயனை நம்பி சூர்யா, விக்ரம் ரேஞ்சுக்கு பட்ஜெட் போட்டு எடுத்து பெயிலியரான திரைப்படம்தான் ஹீரோ. இந்த படத்தால் மேலும் கடனாளி ஆகிவிட்டாராம் தயாரிப்பாளர். அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனின் கடைசி சில படங்கள் தோல்விகளை சந்தித்ததால் அவரது மார்க்கெட்டும் கொஞ்சம் சரிந்துள்ளது.

முன்னொரு காலத்தில் 70 கோடி வரை பிசினஸ் வைத்திருந்த சிவகார்த்திகேயனின் தமிழ் வியாபாரம் தற்போது 50 கோடிக்கும் கீழ் வந்துவிட்டதாம். இதனால் சிவகார்த்திகேயனை வைத்து மிகப்பெரிய பிளான் போட்ட தயாரிப்பாளருக்கு செம்ம அடி விழுந்துள்ளது.

இதன் காரணமாக டாக்டர் படத்தையும் வெளியிட முடியாமல் தடுமாறி வருகிறார். சிவகார்த்திகேயன் அவ்வப்போது தோல்விப்படம் கொடுத்தாலும் ஒரு வெற்றிப்படம் கொடுத்தாலும் அவரது மார்க்கெட் உயர்ந்து விடும் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் அந்த வெற்றி படம் எப்போது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளதாம். இனியும் டாக்டர் படத்திற்கு ஒரு விடிவுகாலம் வரவில்லை என்றால் சொத்துக்களை விற்க வேண்டிய நிலைமைதான் என வருத்தப்படுகிறாராம் தயாரிப்பாளர்.

sivakarthikeyan-cinemapettai
sivakarthikeyan-cinemapettai