வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இமானுக்கு முடிவு கட்ட நாள் குறித்த SK.. மொத்தமாக முற்றுப்புள்ளி வைக்க வரும் அயலான்

Sivakarthikeyan-Imman: கடந்த சில மாதங்களாகவே சிவகார்த்திகேயனின் பெயர் சோசியல் மீடியாவில் மொத்தமாக டேமேஜ் ஆகி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இமான் ஒரு பேட்டியில் துரோகம் என்ற வார்த்தையை கூறியது தான். அதுவே பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்தது.

அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி வந்தனர். இப்படி பல அலப்பறைகள் நடந்தும் கூட சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை. ஆனால் தீபாவளி அன்று தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோவையே அவர் பதிலடியாக கொடுத்திருந்தார்.

இந்த சூழலில் அயலான் பட இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. அதில் சிவகார்த்திகேயன் இமான் சர்ச்சை குறித்த ஒட்டுமொத்த அமளி துமளிகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: ரெமோ மேடையில் சிவகார்த்திகேயன் கதறிய காரணம் இதுதான்.. இப்படியும் ஒரு தயாரிப்பாளரா?

அந்த வகையில் அயலான் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் படகுழுவினருடன் பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இது ஒரு புறம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் சிவகார்த்திகேயனின் பேச்சைதான் ரசிகர்கள் எதிர்நோக்கி கொண்டிருக்கின்றனர்.

அதை பொய்யாக்காத வகையில் சிவகார்த்திகேயனின் மனக்குமுறல்கள் அத்தனையும் அன்று வெளிப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த அளவுக்கு இந்த பிரச்சனையால் அவர் வெளியில் தலை காட்ட முடியாத நிலைக்கு ஆளானார். மேலும் அவருடைய பேச்சு பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: தனுஷை கடுப்பேற்றும் சூப்பர் ஸ்டார்.. பகடைக்காயாய் உருட்டப்பட்ட சிவகார்த்திகேயன்

Trending News