வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

விஜய் மகனே ஆனாலும் வாய்ப்பில்ல ராஜா.. ஏழரை சனியில் சிவகார்த்திகேயன்

சினிமா பிரபலங்களின் வாரிசுகள் பெரும்பாலும் சினிமா துறையை தேர்ந்தெடுத்து செல்வார்கள். அந்த வகையில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் விஜய் விதிவிலக்கல்ல. அனைவரும் இவர் நடிகராக வருவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் மாறாக இயக்குனர் அவதாரம் எடுத்து வருகிறார்.

ஜேசன் விஜய் ‘புல் த ட்ரிகர்’ என்ற ஒரு குறும்படத்தை எடுத்து வெளியிட்டார். அந்த படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை என்றாலும் அவர் ஒரு இயக்குனர் என்பதற்கு ஒரு அடையாளமாக இருந்தது. அதனை அவர் சரியாக பயன்படுத்தி பெரிய திரையில் தனது திறமையை காட்ட மீண்டும் ஓடினார்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜேசன் விஜய் ஒரு கதையை சொல்லி இருந்தார். ஆனால் சிவகார்த்திகேயன் அந்த படத்தை ரிஜெக்ட் செய்து திருப்பி அனுப்பி விட்டார். காரணம், சிவகார்த்திகேயன் எதிர்பார்த்தது ஒரு பெரிய மாஸ் கதை.

ஆனால் ஜேசன் விஜய் சொன்ன கதை ஒரு திரில்லர் மூவியாக இருந்து. சிவகார்த்திகேயன் திரில்லர் படங்கள், டிராமா படங்கள் என இல்லாமல் மாஸ் படங்களாக நடித்து ரசிகர்களை கவர் வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு ஒரு தனுஷ் கிடைத்த மாதிரி ஜேசன் விஜய்க்கு ஒருவர் கிடைக்க மாட்டாரா என விஜய் ரசிகர்கள் நினைக்கிறார்கள். இதை தெரிந்து கொண்ட விஜய் கண்டிப்பாக என் பையனுக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பேன் என முடிவு செய்திருக்கிறார்.

ஜேசன் விஜய்யின் அடுத்த முயற்சி

முயற்சியை கைவிடாத ஜேசன் விஜய் துருவ் விக்ரமிடம் இந்த கதையை கூறியிருக்கிறார். அவருக்கு இந்த கதை மிகவும் பிடித்து போக, உடனே நாம் ஆரம்பிக்கலாம் என்று சொல்லி ஓகே செய்துள்ளார்.

ஆனால் விஜய்யின் போட்டியாளரான அஜித்தை பொறுத்தவரையில் அவர் மகன் சினிமா துறையில் இல்லாமல் கால்பந்தில் ஆர்வம் காட்டுகிறார்.

விஜய் அஜித் சண்டை அதிகமாக இருந்தாலும் அவரது வாரிசுகள் வேற வேற துறையில் சண்டை இல்லாமல் இருப்பது மிகவும் நல்லது தான்.

Trending News