ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

அன்னிக்கு AK.. இன்னைக்கு SK.. சிவகார்த்திகேயனை கேரவனுக்கு தனியா கூப்பிட்ட விஜய்

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தி கோட்’. கலவையான விமர்சனங்களாக இருந்தாலும், வசூலில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, லைலா, ஜெயராம், மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் சின்ன ரோலில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். விஜய்க்கும் அவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் பார்வையாளர்களால் கொண்டாடப்பட்டது. இதிலிருந்து அடுத்த தளபதி என்று ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் தல அஜித்தின் இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்துவிடுவாரா என்ற சந்தேகம் தற்போது வந்துள்ளது.

அன்னிக்கு AK.. இன்னைக்கு SK

‘தி கோட்’ படப்பிடிப்பின்போதே சிவகார்த்திகேயனுக்கு விலையுர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் விஜய். அப்போது படப்பிடிப்பில் நடந்த விஷயங்களை வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார்கள். இதில் சிவகார்த்திகேயனுக்கு சர்ப்ரைஸாக வாட்சை வழங்கியிருக்கிறார் விஜய்.

அந்தப் படப்பிடிப்பு முடிந்தவுடன் விஜய்யின் கேரவேனில் சிவகார்த்திகேயன் சந்தித்த வீடியோ பதிவும் அதில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ பதிவின் மூலம் விஜய் – சிவகார்த்திகேயன் இருவரும் இடையே பெரும் நட்பு உருவாகி இருப்பது தெரிகிறது.

இந்த போட்டோ தற்போது வைரலாகி வரும் நிலையில், சில வருடங்களுக்கு முன்பு, அஜித்-க்கு இதே போல விஜய் ஒரு வாட்சை பரிசளித்த போட்டோவும் தற்போது வைரல் ஆகி வருகிறது. இதை தொடர்ந்து அன்னிக்கு AK .. இப்போ SK என்று ரசிகர்கள் பெருமையுடன் பதிவிட்டு வருகின்றனர்.

Trending News