வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பல வருடமாக கிடப்பில் இருக்கும் பிரம்மாண்ட படம்.. இந்த தடவையும் வராது எனக் கூறிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் டாக்டர், டான் வெற்றி படங்களை தொடர்ந்து பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பிரின்ஸ் படத்திற்கு போட்டியாக கார்த்தியின் சர்தார் படமும் வெளியாக உள்ளது.

ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி பல வருடமாக கிடப்பில் போட்டிருக்கும் படத்தின் ரிலீஸுகாக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அதாவது டான் படத்திற்கு முன்பே சிவகார்த்திகேயன் நடித்து வந்த படம் அயலான். இந்த படத்தை இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

Also Read :களத்தில் இறங்கும் உலகநாயகன்.. விஜய்யுடன் போட்டி போடும் சிவகார்த்திகேயன்

மேலும் ரகுல் ப்ரீத்தி சிங், இஷா கோபிகர், கருணாகரன், யோகி பாபு போன்ற பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கோவிட் தொற்றுக்கு முன்பே படப்பிடிப்பு ஆரம்பித்த நிலையில் சில காரணங்களினால் பலமுறை படப்பிடிப்பால் தடைப்பட்டது.

ஒரு வழியாக படத்தை எடுத்து முடித்த நிலையில் சி.ஜி வேலைகள் மீதம் இருக்கிறதாம். இது பற்றி சிவகார்த்திகேயன் பிரின்ஸ் ப்ரோமோஷனில் கூறுகையில் தமிழ் சினிமாவில் அயலான் படம் மாதிரி ஒரு படம் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என கூறியுள்ளார்.

Also Read :எல்லாமுமாய் இருந்தவரை நம்ப வைத்து கழுத்தறுத்த சிவகார்த்திகேயன்.. காற்றில் பறந்த வாக்குறுதி

ஏனென்றால் இப்படம் ஏலியன், கிராபிக்ஸ் அனிமேஷன், சயின்ஸ் ஃபிக்சன் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அயலான் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்த நிலையில் சிவகார்த்திகேயன் இப்படம் அடுத்த ஆண்டு வெளியிட பட குழு திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த தீபாவளி பண்டிகைக்காவது அயலான் படத்தை பார்த்துவிடலாம் என்று நினைத்த சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை தந்துள்ளது. ஆனால் அயலான் படத்தைப் பற்றி சிவகார்த்திகேயன் ஆகா ஓகோ என்று பேசியுள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

Also Read :கொஞ்சமும் எதிர்பார்க்காமல் தோற்றுப் போன ரஜினி.. மூட பழக்கத்தை தூக்கி எறிந்த சிவகார்த்திகேயன்

Trending News