வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அமரன் படத்துக்கு SK-வின் சம்பளம் 30 கோடி.. மெரினா படத்துக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Sivakarthikeyan: கலக்குற சந்துரு என்று சொன்னதுக்கு இப்படியா, என்று சந்தானம் ஒரு காமெடியில் கேட்டிருப்பார். அது யதார்த்தமாக சிவகார்த்திகேயனுக்கு பொருந்தி விட்டது. சிவகார்த்திகேயனை 2K கிட்ஸ்களை தாண்டி 90 கிட்ஸ்களுக்கு இன்னும் கொஞ்சம் நெருக்கமாக தெரியும்.

கலக்கப்போவது யாரு சிவகார்த்திகேயன் அந்த அளவுக்கு பரிச்சயம் இல்லை என்றாலும், Boys vs Girls நிகழ்ச்சியில் கொஞ்சம் கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் ஜோடி நம்பர் ஒன் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய போது தான் சிவகார்த்திகேயனை மக்களுக்கு அவ்வளவு பிடித்து விட்டது.

ஒவ்வொரு வீட்டின் செல்லப் பிள்ளையாகவே அவர் மாறிவிட்டார். சிவகார்த்திகேயனை அந்த அளவுக்கு மக்கள் ரசிக்க பாதிக்கு பாதி காரணமாக இருந்தது ரம்யா கிருஷ்ணன் தான். தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியாக இருக்கட்டும், அதன் ப்ளூபர்சாக இருக்கட்டும் இப்போ பார்த்தாலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

மெரினா படத்துக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அதன் பின்னர் சிவகார்த்திகேயன் மெரினா படத்தில் நடிக்கும் பொழுது நம்ம வீட்டுப் பையனுக்கு சினிமால சான்ஸ் கிடைச்சுடுச்சு என்றுதான் எல்லோருக்கும் சந்தோஷம் இருந்தது. மனங்கொத்தி பறவை படம் நடிக்கும் வரைக்கும் சிவகார்த்திகேயன் விஜய் டிவியை விட்டு வரவில்லை.

அது இது எது நிகழ்ச்சியை தொடர்ந்து வழங்கி வந்தார். அதன் பின்னர் தான் சின்னத்திரையில் இருந்து விலகி முழு நேர ஹீரோவானார். மைக்கை கையில் பிடித்து விட்டு ரம்யா கிருஷ்ணன் கொடுக்கிற டாஸ்கை செய்த சிவகார்த்திகேயன் தான், இன்று அமரன் படத்தில் முகுந்த் வரதராஜன் ஆக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் அடுத்த தளபதி என்று ஒரு கூட்டம் கொண்டாடும் அளவுக்கு சிவகார்த்திகேயனின் வளர்ச்சி இருக்கிறது அமரன் படத்திற்காக 30 கோடி சம்பளம் வாங்கிய சிவா, அவருடைய முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் பத்தாயிரம் ரூபாய் தான். கடின உழைப்பு மற்றும் ஒழுக்கம் இருந்தால் ஜெயித்துக் காட்டலாம் என்பதை நிரூபித்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Trending News