சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான படம் அமரன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் உலகம் முழுவதும் இப்படம் ரூ. 300 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
இப்படத்தை ராஜ்கமல் தயாரித்த நிலையில், மீண்டும் இதே கூட்டணி மற்றொரு பிரமாண்ட படத்தில் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகிறது. இப்படத்தை தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸின் ஆக்டம் படம் ஒன்றில் சிவா நடித்து வருகிறார்.
இப்படத்தை அடுத்து, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். டான் படத்தை அடுத்து, இருவரும் இணையும் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அதேபோல், சூர்யா நிராகரித்த, புறநானூறு படத்தில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
எல்.ஐ.கே படத்தில் சிவா நடிக்க வேண்டியது – விக்னேஷ் சிவன்
இந்த நிலையில், எல்.ஐ.கே படத்தில் சிவா நடிக்க வேண்டியது என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்துக்குப் பின் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் எல்.ஐ.கே. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்து வருகிறது.
இப்படம் டைம் டிராவல் பற்றிய கதையாக இருக்கும் எனத் தகவல் வெளியாகிறது. இந்த நிலையில், விக்னேஷ் சிவன் ஒரு பேட்டியில், இப்படம் முதலில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியது. ஆனால், பட்ஜெட் அதிகமாக இருப்பதால் லைகா அதை கைவிட்டுவிட்டது. இப்படத்தின் கதையை மாற்றும்படி கூறினர்.
அப்படி மாற்ற முடியாது என்று படத்தயாரிப்பு நிறுவனத்திடம் பேசிவிட்டதாகவும் அதன் பின் இப்படத்தை லித்குமார் தயாரிக்க முன் வந்தாக தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய கதையில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது. விரைவில் இப்படத்தின் அடுத்த அப்டேட்ட்டை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.