வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஸ்கூல் டீச்சராக மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்.. ட்ரெண்டாகும் பிரின்ஸ் பட டிரெய்லர்

சிவகார்த்திகேயனின் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்திய இந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த அந்த ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.

ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே பயங்கர கலவரம் ஒன்று காட்டப்படுகிறது. அதைத்தொடர்ந்து சத்யராஜ், இன்னுமா சாதி, மதம் பேரை சொல்லி அடிச்சிக்கிறீங்க நாம் எல்லாம் ஒரே ரத்தம் என்று கூறி அங்கே இருப்பவர்களின் கையை கீறி ஒரே ரத்தம் என்று நிரூபிக்க பார்க்கிறார்.

Also read:என்னுடைய முதல் தீபாவளி ரிலீஸ்.. பிரின்ஸ் பட ட்ரைலரை அறிவித்த சிவகார்த்திகேயன்

இப்படி சீரியஸாக சென்று கொண்டிருக்கும்போது ஒருவர் என்னோட ரத்தம் சிவப்பு, என்னோடது லைட் பிங்க் கலர் என்ற காமெடியுடன் சிவகார்த்திகேயன் அறிமுகமும் காட்டப்படுகிறது. ஸ்கூல் டீச்சராக வரும் சிவகார்த்திகேயன் மீது ஏகப்பட்ட புகார்கள் வருகிறது.

அதில் குழந்தைகளை புக்கை பார்த்து எக்ஸாம் எழுத சொல்வது, அதற்கு ஒரு காரணம் சொல்வது, சக ஆசிரியை மேல் காதல் கொள்வது என்று சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தில் அடித்த லூட்டியை இதிலும் கண்டினியூ செய்து இருக்கிறார்.

அதிலும் 18 வயதுக்கு மேல் இருப்பவர்கள் மேயர், இந்தியாவில் இருக்கும் பெண்கள் எல்லாம் என்னோட சகோதரிகள். அதனால் தான் வெளிநாட்டு பெண்ணை காதலித்தேன் என்பது போன்ற வசனங்கள் நிச்சயம் கைதட்டலை பெறும்.

Also read:சிவகார்த்திகேயனுக்கு டஃப் கொடுக்க இவரால் மட்டுமே முடியும்.. பிரின்ஸ் படத்தை தூக்கி சாப்பிட்ட பிசினஸ்

சத்யராஜ், ராகுல் தாத்தா, ஆனந்தராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் பிரேம்ஜி அமரன் எங்கே என்று கேட்க தோன்றுகிறது. ஒரு காட்சியில் பிரேம்ஜி அமரனின் மாஸ்க் போட்ட நபர் தான் தெரிகிறார்.

அதனால் அவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய சஸ்பென்ஸ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தம் இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது.

Trending News