சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது சினிமா பயணத்தை துவங்கிய, சிவகார்த்திகேயன் படிப்படியாக முன்னேறி தற்போது முன்னணி கதாநாயகனாக விளங்குகிறார். இவர் நடித்த டாக்டர் திரைப்படம் கொரோனா காலக்கட்டத்திலும் கடந்த ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்டு 100 கோடி வசூலை குவித்தது.
இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து கொண்டிருக்கும் டான் திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. அத்துடன் இந்தப் படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி மில்லியன் கணக்கான ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் மனைவியும் அவருடைய ஒன்பது வயது மகள் ஆராதனா மற்றும் ஒரு வயது ஆண் குழந்தை குகன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது.
இந்த புகைப்படத்துடன் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பொங்கல் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனின் குடும்ப புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ‘சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா மளமளவென வளர்ந்து விட்டார்களே!’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் அடிக்கின்றனர்.
மேலும் சிவகார்த்திகேயனும் அவருடைய மகன் இருவரும் ஒரே கலர், பச்சை நிற சட்டையை அணிந்து பொங்கலை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். அதேபோல் சிவகார்த்திகேயன் மகள் மற்றும் மனைவி இருவரும் ஒரே கலர், ப்ளூ கலர் உடையணிந்து பொங்கலை கொண்டாடி உள்ளனர்.
வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் ஆராதனா சிவகார்த்திகேயன் நடித்த கானா திரைப்படத்தில் ‘வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடலைப் பாடி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தற்போது சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வெளியிட்டிருக்கும் புகைப்படம் அவருடைய ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு கொண்டிருக்கிறது.