வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

விஜய் பட வில்லன் தான் வேணும்னு அடம் பிடித்த SK.. கோர்த்து விட்டு அழகு பார்த்த முருகதாஸ்

Sivakarthikeyan : ஏஆர் முருகதாஸ் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து எஸ்கே 23 படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏஆர் முருகதாஸ் மற்றும் விஜய் இடையே ஒரு நெருங்கிய நட்பு இருந்து வந்தது.

அந்த வகையில் இவர்களது கூட்டணியில் வெளியான துப்பாக்கி படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதைதொடர்ந்து ஏஆர் முருகதாஸ் கதை திருட்டு பிரச்சனையில் சிக்கியதால் விஜய் அதன் பிறகு அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

இதை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற நிலையில் சிவகார்த்திகேயன் படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில் விஜய் பட வில்லன் தான் வேண்டும் எனக்கு என சிவகார்த்திகேயன் அடம் பிடித்துள்ளார்.

எஸ்கே 23இல் வித்யூத் ஜம்வால்

அதேபோல் மாஸ் வில்லனை சிவகார்த்திகேயனுடன் கோர்த்துவிட்டு அழகு பார்த்துள்ளார் முருகதாஸ். அதாவது துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த அவர் வித்யூத் ஜம்வால். இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதைத்தொடர்ந்து சூர்யாவின் அஞ்சான் படத்திலும் நடித்திருந்தார். இப்போது சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வித்யூத் நடிக்கிறார் என்றால் கண்டிப்பாக எஸ்கே23 படத்தில்
அதிரடியான ஆக்சன் காட்சிகள் பஞ்சம் இருக்காது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மயிலாப்பூர் திருமயிலை ரயில்வே ஸ்டேஷனில் நடைபெற்றது. அந்த புகைப்படத்தை முருகதாஸ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News