வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பாலிவுட் ஹீரோயினுக்கு ஸ்கெட்ச் போடும் சிவகார்த்திகேயன்.. அவங்க சர்ச்சைக்கு ரொம்ப பேமஸ் ஆச்சே

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது டான் திரைப்படம் வெளியாகி கோடிக்கணக்கில் வசூல் லாபம் பார்த்து வருகிறது. இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக, முன்னணி நடிகர்களுக்கு இணையாக மாறியிருக்கிறார்.

இதனால் அவரை பெரிய பெரிய தயாரிப்பாளர்களும் தங்கள் திரைப்படங்களில் கமிட் செய்வதற்கு போட்டி போட்டு வருகின்றனர். அதில் சிவகார்த்திகேயன் ஸ்கிரிப்டை கேட்கிறாரோ, இல்லையோ முதலில் தனக்கு ஜோடியாக எந்த ஹீரோயின் நடிக்க வேண்டும் என்று செலக்ட் செய்து விடுவார்.

இப்படித்தான் டாக்டர் திரைப்படத்தின் போது பிரியங்கா மோகனை வலைவிரித்து தேடிப் பிடித்துக் கொண்டு வந்தாராம். அந்தப் படத்தில் பெரிய அளவு காதல் காட்சிகள் இல்லாததால் தான் டான் திரைப்படத்திலும் அவரையே மீண்டும் ஜோடியாக கொண்டு வந்தார் என்று கூட சில தகவல்கள் கூறப்படுகிறது.

இப்படி ஹீரோயினுக்கு இம்பார்ட்டன்ஸ் கொடுக்கும் ஹீரோக்களில் சிவகார்த்திகேயன் முதலிடம் பெற்று வருகிறார். அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் பிரபல நடிகை சாய் பல்லவியுடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார்.

அதையடுத்து அவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்திற்காக பாலிவுட் ஹீரோயின் கியாரா அத்வானியை பேசிக் கொண்டிருக்கின்றனர். தற்போது பல ஹிந்தி திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் அவர் சில வருடங்களுக்கு முன்பு வெளியான லஸ்ட் ஸ்டோரி என்ற திரைப்படத்தின் மூலம் அதிக புகழ் பெற்றார்.

அதில் இடம் பெற்ற சில சர்ச்சையான காட்சிகளின் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். தற்போது அவரைத்தான் சிவகார்த்திகேயன் தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார். இதன் மூலம் பாலிவுட்டில் சர்ச்சைக்கு பெயர் போன ஹீரோயின் தற்போது கோலிவுட்டிலும் களம் இறங்க இருக்கிறார்.

Trending News