சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் அயலான் படத்தில் ஆயிரக்கணக்கில் கிராபிக்ஸ் காட்சிகள் எடுத்துள்ளதாகவும். அதுமட்டுமில்லாமல் ஹாலிவுட் படத்திற்கு இணையாக இப்படம் உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் அயலான். இப்படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிக பிரமாண்டமாக உருவாகி வருவதாகவும் இப்படம் முடிவடைவதற்கு இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இப்படம் அதிகமான பொருட்செலவில் உருவாகி உள்ளதாகவும். இதுவரை தமிழில் ஏலியன் வைத்து எந்த படம் எடுக்கவில்லை என்பதால் அயலான் படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
அயலான் படத்தில் கிட்டத்தட்ட 2500 கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும். இது கண்டிப்பாக ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெரும் எனவும் அது மட்டுமில்லாமல் ஹாலிவுட் தரத்திற்கு இப்படம் ரசிகர்களை கொண்டுபோய் சேர்க்கும் எனவும் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான சீமராஜா மற்றும் மிஸ்டர் லோக்கல் போன்ற படங்கள் படுதோல்வி அடைந்தன. அதனால் சிவகார்த்திகேயன் டாக்டர் மற்றும் அயலான் படத்தை முழுமையாக நம்பி உள்ளார் என சினிமா வட்டாரத்தில் அனைவரும் கிண்டலாகப் பேசி வருகின்றனர்.