வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஒரே நாளில் OTT-யில் வெளியாகும் அமரன், லக்கி பாஸ்கர்.. தேதியை நோட் பண்ணிக்கோங்க பாஸ்!

Amaran OTT Release: இந்த வருட தீபாவளி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிரடி தீபாவளியாக அமைந்துவிட்டது. கடந்த சில வருடங்களாக ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு ஜெயிக்கும் அளவுக்கு அதிக அளவு எதிர்பார்ப்பை தூண்டும் படங்கள் ரிலீஸ் ஆகவில்லை.

ஆனால் அந்த குறையை போக்குவதற்கு இந்த வருடம் விருந்தாக அமைந்துவிட்டது. வளர்ந்து வரும் ஹீரோ கவின் நடித்த பிளடி பெக்கர், கம் பேக் கொடுக்க காத்திருக்கும் ஜெயம் ரவியின் பிரதர், தளபதி கையால் துப்பாக்கியை வாங்கிய சிவகார்த்திகேயனின் அமரன் என அமோகமாக படங்கள் ரிலீஸ் ஆகின.

தேதியை நோட் பண்ணிக்கோங்க பாஸ்!

இதற்கிடையே எந்த ஆரவாரமும் இல்லாமல் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. பிரதர் படத்தில் கொஞ்சம் காமெடி சொதப்பல் என விமர்சனம் எழுந்து இருக்கிறது.

கவின் நடித்த பிளடி பெக்கர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் எதிர்பார்த்தது மாதிரியே சிவகார்த்திகேயனின் அமரன் படம் தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறது.

ஒரு பக்கம் தேசப்பற்று, இன்னொரு பக்கம் உருகும் காதல் என மேஜர் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்து விட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த படம் உலக அளவில் 40 கோடிக்கும் மேல் ரிலீஸ் ஆன இரண்டு நாட்களிலேயே வசூல் சாதனை படைத்திருக்கிறது.

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் படமும் உலக அளவில் வசூல் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் முடிவதற்குள்ளேயே இந்த இரண்டு படங்களின் ஓடிடி ரிலீஸ் எப்போது என தெரிய வந்திருக்கிறது.

அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் என்ற இரண்டு படங்களையும் Netflix ஓடிடி தளம் தான் வெளியிட இருக்கிறது. விடுமுறை கொண்டாட்டத்தை குறி வைத்து இந்த இரண்டு படங்களையும் களமிறக்கிறது இந்த நிறுவனம். இந்த மாதம் முழுக்க முடிந்து டிசம்பர் மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் இரண்டு படங்களுமே ஒன்றாக ரிலீஸ் ஆக இருக்கின்றன.

Trending News