வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 21, 2025

சூப்பர் மேட்டரை கையில் எடுத்த AR முருகதாஸ்.. சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் கதை இதுதான்

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கிக் கொண்டிருக்கும் படத்திற்கு மதராசி என பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த டைட்டில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது.

மதராசி என்பது ஏற்கனவே அர்ஜுன் நடித்த படத்தின் டைட்டில் என்றாலும் இப்போது இது பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இதற்கு காரணம் மதராசி என்றால் மெட்ராஸ் காரன் என்று பொருள். இதை மையமாக வைத்து முருகதாஸ் எந்த மாதிரியான கதையை எழுதி இருப்பார் என்பது தான் தற்போது எல்லோருடைய எதிர்பார்ப்பு.

மதராஸி படத்தின் கதை இதுதான்

சமீபத்தில் இது குறித்து இயக்குனர் பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார்.

அதாவது சூர்யாவுக்கு ஏழாம் அறிவு மற்றும் விஜய்க்கு துப்பாக்கி படம் அமைந்தது போல் சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் இது ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படம் ஆக இருக்கப் போகிறதாம். இதன் மூலம் சிவகார்த்திகேயன் படம் முழுக்க ஆக்சன் ஹீரோவாக களமிறங்க போகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒன்லைன் குறித்தும் முருகதாஸ் பேசி இருக்கிறார்.

அதாவது வட இந்திய மக்களின் பார்வையில் நாம் எப்படி இருக்கிறோம், அவர்கள் நம்மை என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

பெரும்பாலும் வட இந்தியக்காரர்கள் தான் நம்மை மதராசி என்று அழைப்பதுண்டு. அதனால் தான் இந்த படத்திற்கு இப்படி ஒரு டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறதாம்.

Trending News