சிவகார்த்திகேயன் தனுஷ் என்றாலே வளர்த்த கடா மார்பில் முட்டுவது போல என்ற வாசகம் தான் அனைவருக்குமே நினைவுக்கு வரும். வளர்த்து விட்ட தனுசை சிவகார்த்திகேயன் பதம் பார்த்துவிட்டார் என இப்போதுவரை கோலிவுட்டில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அது இன்றும் ஒவ்வொரு விஷயங்களிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முதலில் தனுஷ் சிவகார்த்திகேயன் வளர்ச்சியை பார்த்து பொறாமை கொள்வதாக ஒரு பக்கம் செய்தியை கிளப்பினார்கள்.
இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் தனுசை பழி வாங்குவதற்காகவே மிகப் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உருவெடுத்து வருகிறார் எனவும் கூறுகின்றனர்.
இந்நிலையில் தற்போது அதை உறுதியாக்கும் வகையில் ஒரு செய்தி கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது அறிமுக இளம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கும் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் கோயம்புத்தூரில் தொடங்கி முடிவடைந்தன. இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளதாம். அதை சென்னையில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் முதல் முதலில் அந்த கதையை சிபி சக்கரவர்த்தி தனுஷின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திடம் தான் சொன்னாராம்.
அவர்களும் இந்த படத்தை தனுசை வைத்து பண்ணலாம் என கூறிய நிலையில், இடையில் சிவகார்த்திகேயனுக்கு இந்த கதை கேட்கும் வாய்ப்பு கிடைக்க, அவரும் படத்தை ஓகே செய்ய, தற்போது 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. கல்லூரிகளில் டான் போல் உதார்விட்டு சுற்றிவரும் இளைஞர்களை குறித்த கதை எனவும் கூறுகின்றனர். நக்கல் நையாண்டியுடன் காமெடி கலாட்டாவாக இந்த படம் உருவாகி உள்ளதாம்.
