வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ராஜமௌலியிடம் நைஸாக கொக்கி போட்ட சிவகார்த்திகேயன்.. சுயலாபத்திற்காக பேசினாரா.?

சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக கருதப்படும் இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்தில் தெலுங்கு  சூப்பர் ஸ்டார்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எனவே இந்தப் படம் வரும் ஜனவரி 7-ம் தேதி அன்று திரையரங்கில் ரிலீஸாகவுள்ளது.

அதற்கு முன் நடந்த திரைப்பட விழாவின் போது வருகை தந்திருந்த நடிகர் சிவகார்த்திகேயன் ராஜமௌலியை புகழ்ந்து தள்ளியுள்ளார். ஏனென்றால் ஈயை கதாநாயகனாக வைத்து படம் எடுத்த ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பு சிவகார்த்திகேயனை வியக்க வைத்துள்ளது.

அதன் பிறகு சிவகார்த்திகேயன் ஈ-யை வைத்து படம் எடுக்கும் பொது நம்மளை வைத்து படம் எடுக்க மாட்டார்களா! என்ற எண்ணமும் அவருக்கு எழுந்ததாம். அதுமட்டுமின்றி ஈ-யே போதும் என்று முடிவெடுத்துவிட்டால் நம்முடைய நிலைமை என்ன என்ற பயமும் சிவகார்த்திகேயனுக்கு வந்ததாம்.

இவ்வாறு மேடையில் சிவகார்த்திகேயன் ராஜமௌலியை குறித்து நெகிழ்ச்சியான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் ஆர்ஆர்ஆர் படத்தின் கதாநாயகன்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் இருவரும் கர்ஜிக்கும் சிங்கம் என்று புகழ்ந்து தள்ளினார்.

மேலும் ஆர்ஆர்ஆர் படம், அதைத் தொடர்ந்து வெளியாகும் தல அஜித்தின் வலிமை படம் போன்றவை, வரும் புத்தாண்டில் தொடர்ந்து ரிலீஸாகி ரசிகர்களை திரையரங்கிற்கு வர வைக்க செய்யும். அதன் பிறகு எங்களைப் போன்ற சின்னச்சின்ன நடிகர்களின் படங்களை திரையிட்டால் பார்ப்பதற்கு ரசிகர்கள் தயங்காமல் வருவார்கள் என்ற சுயநலத்துடன் ஆர்ஆர்ஆர் படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள் என்று சிவகார்த்திகேயன் எதார்த்தமாக பேசியது பலருடைய கவனத்தை பெற்றது.

மேலும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் இந்திய அளவில் மிகப் பெரிய மைல் கல்லாக அமையும். அத்துடன் இந்த படம் சினிமாவிற்கு எடுத்துக்காட்டாக காண்பிக்கப்பட்ட படமாகவும் மாறும் என்றும் சிவகார்த்திகேயன் ஆர்ஆர்ஆர் திரைப்பட விழாவில் நெகிழ்ந்து பேசினார். இப்படி பேசியது சினிமா துறையின் மேலுள்ள ஆர்வமா இல்ல சுயலாபத்திற்காகவா என்பது போன்ற விமர்சனங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Trending News