வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பிரச்சனையெல்லாம் ஒன்னும் இல்ல, தனுஷுக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்.. எதுக்கு தெரியுமா?

சிவகார்த்திகேயனுக்கு என்றே எழுதிய பாடல் என்றால் அது, எதிர்நீச்சல் படத்தில் வரும், பூமி என்ன சுத்துதே.. பாடல் தான். ஒவ்வொரு வரியும் சிவகார்த்திகேயன் திரையில் ஆரம்பித்த பயணத்தை மறைமுகமாக குறிப்பது போலவே இருக்கும். இந்த அருமையான பாடலை சிவகார்திகேயனுக்காக எழுதியது தனுஷ் தான்.

திறமையுள்ளவர்களை திரைக்கு கொண்டு வந்து, அவர்களை கோபுரத்தில் வைத்து அழகு பார்ப்பத்தில் தனுஷுக்கு ஒரு சந்தோசம். எப்போதும் தான் மாட்டும் முன்னேறினால் போதும் என்று நினைக்காமல், பலருக்கு வாய்ப்பு கொடுத்து உயர்த்தி விட்டவர்.

அப்படி அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு, அடுத்த தளபதியாக மாறி இருப்பவர் தான் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறாக இப்படம் உருவாகியுள்ளது.

தனுஷுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்

தற்போது அமரன் படம் 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயனின் படங்களிலேயே அதிக ஷேர் கொடுத்த படமாக அமரன் உருவெடுத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த அமரன் பட விழாவில் சிவகார்த்திகேயன் நடிகர் தனுஷிற்கு தன் நன்றியினை தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கு பிரச்சனை என்ற செய்தி பூதாகரமாக வெடித்துக்கொண்டிருந்தது. முக்கியமாக சிவகார்த்திகேயன் கொட்டுக்காளி பட நிகழ்ச்சியில், பேசியது மிகப்பெரிய பேசும் பொருளாக மாறி இருந்தது. அதில் பலர் தனுஷுக்கு ஆதரவாக சிவகார்த்திகேயனை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

ஆரம்பகாலகட்டத்தில் தனுஷ் சிவகார்த்திகேயனை வைத்து தொடர்ந்து இரு படங்களை தயாரித்தார். எதிர் நீச்சல் மற்றும் காக்கி சட்டை ஆகிய படங்களை சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து தயாரித்தார் தனுஷ். அப்படம் சிவகார்த்திகேயனின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

அதிலும் குறிப்பாக பூமி என்ன சுத்துதே என்ற பாடல் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடலாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அமரன் விழாவில் இப்பாடலை சிவகார்த்திகேயன் பாடிவிட்டு, இப்பாடலுக்கு தனுஷ் சாருக்கு தான் நன்றி சொல்லணும். எனக்காக மிக விரைவாக இப்பாடலை தனுஷ் சார் எழுதி கொடுத்தார் என கூறினார் சிவகார்த்திகேயன்.

இதன் மூலமாக இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.. எல்லாம் பத்திரிக்கையாளர்கள் கொளுத்தி போடும் வேலை என்பது நிரூபணமாகியுள்ளது.

Trending News