திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியால் மோசம் போன இயக்குனர்.. மொத்த தப்பையும் இப்படி என் தலையில இறக்கிட்டீங்களே!

இப்போது சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி இடையே தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. மேலும் சமீபத்தில் கூட விஜய் சேதுபதி சிவகார்த்திகேயனுக்கு நண்பனாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என தனது ஆசையை கூறியிருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரால் ஒரு இயக்குனர் மோசம் போய் உள்ளார்.

அதாவது சிவகார்த்திகேயனின் கேரியரில் மிக மோசமான தோல்வியை சந்தித்த படம் சீமராஜா. அதன் பிறகு இவரது நடிப்பில் கடைசியாக வெளியான பிரின்ஸ் படமும் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இயக்குனர் பொன்ராம் சிவகார்த்திகேயனுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

Also Read : கேரக்டரை மாத்த சொல்லி அதிகப்பிரசங்கித்தனம் செய்த சிவகார்த்திகேயன்.. அப்படியே வச்சு ஹிட்டடித்த கார்த்திக் சுப்புராஜ்

ஆனால் சீமராஜா பட தோல்விக்கு பொன்ராம் தான் காரணம் என்பது போல ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் பேசி இருந்தார். பொன்ராம் சிவகார்த்திகேயனுக்காக ஒரு ஸ்கிரிப்ட்டை தயார் செய்துள்ளார். இதில் பல விஷயங்களை மாற்ற சொல்லி மொத்தத்தையே கதையையே மாற்றி விட்டார் சிவகார்த்திகேயன்.

இதனால் தான் சீமராஜா படம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இப்போது பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்கு தியேட்டரில் ஈ ஓட்ட கூட ஆள் இல்லையாம். அந்த அளவுக்கு படம் மிக மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் தொடர்ந்து வருகிறது.

Also Read : விஜய் சேதுபதியின் நிறைவேறாத ஆசை.. வெளிப்படையாக பேட்டியில் கூறிய சம்பவம்

முதலில் பொன்ராம் டிஎஸ்பி படத்தில் விஜய் சேதுபதி இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பது போல் கதை எழுதியுள்ளார். அதில் ஒரு விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் மொட்டை அடிப்பதாக கதை எழுதப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இவை எல்லாவற்றிக்கும் விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதன்பின்பு விஜய் சேதுபதிக்கு எக்கச்சக்க பட வாய்ப்பு வந்ததால் அனைத்திற்கும் கால்ஷீட் கொடுத்து கமிட் ஆகவுள்ளார். இப்போதைக்கு மொட்டை அடிக்க வாய்ப்பே இல்லை என்று இயக்குனரிடம் விஜய் சேதுபதி கராராக சொல்லிவிட்டாராம். ஆகையால் மீண்டும் வேறு கதை எழுதியதால் தான் படம் சொதப்பிவிட்டது.

இப்போது படம் தோல்விக்கு காரணம் பொன்ராம் என்ற பேச்சு தான் அடிபட்டு வருகிறது. இப்படி சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதியை நம்பி மோசம் போன பொன்ராம் இனி இவர்கள் பக்கம் தலையைக் காட்டக் கூடாது என உறுதியாக உள்ளாராம்.

Also Read : பிளாக்பஸ்டர் ஹிட் பட டீமே இப்படி ஆடல.. வெட்கமே இல்லாமல் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய விஜய் சேதுபதி

Trending News