வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தோல்வி பட இயக்குனரை தூக்கிவிடும் சிவகார்த்திகேயன்.. மேடையில் உறுதி செய்த கூட்டணி

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான பிரின்ஸ் திரைப்படம் பெருந்தோல்வி அடைந்ததையொட்டி , கட்டாயம் அடுத்த வெற்றியை கொடுக்க மும்முரமாய் உள்ளார். அந்த வகையில், இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இப்படத்திற்கான ப்ரீ ரிலீஸ் வசூல் மட்டுமே 100 கோடி வரை ஆகியுள்ள நிலையில் மாவீரன் படக்குழு தற்போது மும்முரமாக இப்படத்தை இயக்கி வருகின்றனர். இதனிடையே அண்மையில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு மேடையில் இப்படம் குறித்து பேசினார்.மேலும் ரீ என்ட்ரி இயக்குனருடனான கூட்டணியில் இணைய உள்ளதை அறிவித்துள்ளார்.

Also Read:  தோல்வி பயத்தை காட்டும் 2 ஹீரோக்கள்.. என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பி தவிக்கும் சிவகார்த்திகேயன்

இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆகஸ்ட் 16,1947 படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் கவுதம் கார்த்திக், கல்யாண் ப்ரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் ஏப்ரிலில் ரிலீசாக உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் இப்படத்தின் தயரிப்பாளர் ஏ.ஆர். முருகதாஸ் பற்றி பேசினார்.

தமிழில் அஜித்தின் தீனா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர் முருகதாஸ்,தொடர்ந்து பல சமூக கருத்துக்களை மையமாக வைத்து பல படங்களை இயக்கினார். இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் தர்பார் படத்தை தொடர்ந்து வேறு படங்கள் இவர் இயக்காமல் உள்ளார். இந்த நிலையில் ஆகஸ்ட் 16, 1947 படத்தை ஏ.ஆர் முருகதாஸின் ஏ.ஆர்.எம் தயாரிப்பு நிறுவனம் மூலமாக தயாரித்துள்ளார்.

Also Read: அஜித்தை பார்த்து ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன்.. முழு வீச்சில் செக் வைக்கும் மனைவி

இதனிடையே சிவகார்த்திகேயன் மேடையில் பேசுகையில் தான் தொகுப்பாளராக இருக்கும்போது ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்த எங்கேயும், எப்போதும் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை தான் தொகுத்து வழங்கியதாகவும், அதன் பின், தான் நடித்த மான் கராத்தே படத்தை அவரது தயாரிப்பில் வெளியானதாகவும் தெரிவித்தார். அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த இப்படத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளது, தனக்கு மகிழ்ச்சி என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் இன்னும் ஒரே ஒரு விஷயம் தான் ஏ ஆர். முருதாஸுடன் இணைய பாக்கி, அதுவும் கூடிய விரைவில் நடக்கவுள்ளது என சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதை கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஏ.ஆர்.முருதாஸுடன் இணைந்த நடிகர்கள் கட்டாயம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸின் ரீ என்ட்ரியில் இணைய உள்ள படத்தின் அப்டேட் வெளியாகி வைரலாகியுள்ளது.

Also Read: இவங்க ரெண்டு பேர் சாயலில் தான் என் நடிப்பு இருக்கும்.. உண்மையை உளறிய சிவகார்த்திகேயன்

Trending News