வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அஜித்துடன் மோதிப் பார்க்க ஆசைப்படும் சிவகார்த்திகேயன்.. அமரனுக்கு துணிச்சல் ஜாஸ்தி

Ajith : சிவகார்த்திகேயனுக்கு இப்போது சுக்கிர திசை செல்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் சமீபத்தில் தான் அவரது குடும்பமும் பெரிதானது. அதாவது சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவதாக குழந்தை பிறந்தது. அதேபோல் சினிமாவிலும் அவரது வளர்ச்சி பெரிதாகிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் அயலான் ஒரு அளவு நல்ல வெற்றியை கொடுத்த நிலையில் சமீபத்தில் அமரன் படம் வெளியானது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் 250 கோடி வசூலை தற்போது வரை எட்டி இருக்கிறது. இப்போதும் தியேட்டரில் ஹவுஸ்புல் ஆக சென்று கொண்டிருக்கிறது.

அதோடு அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் என்ற ஒரு பேச்சும் போய்க்கொண்டிருக்கிறது. சமீபத்தில் அஜித்தையும் மேடையில் பாராட்டி பேசி இருந்தார். இவ்வாறு அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை கவர்ந்து வரும் சிவகார்த்திகேயன் இப்போது ஒரு துணிச்சலான முடிவை எடுத்திருக்கிறார்.

அஜித்துடன் மோத போகும் சிவகார்த்திகேயன்

அதாவது ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் கூட்டணியில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படம் அஜித்தின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி வெளியிட உள்ளனர். அதே நாளில் தான் சிவகார்த்திகேயன் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படம் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் வளர்ச்சி அபரிவிதமாக இருக்கிறது. ஒருவேளை அஜித் படத்துடன் மோதி அதிக வசூலை சிவகார்த்திகேயன் பெற்று விட்டால் அவரது மார்க்கெட் குறுகிய காலத்திலேயே பெரிய இடத்தை எட்டி விடும். இதை கருத்தில் கொண்டு தான் சிவகார்த்திகேயன் துணிச்சலாக இறங்கி இருக்கிறார்.

இதற்கு முன்னதாக அஜித் மற்றும் விஜய் இருவரின் துணிவு மற்றும் வாரிசு படங்கள் ஒன்றாக வெளியானது. துணிவு படம் தான் இதில் வெற்றி பெற்றது. இந்த முறை சிவகார்த்திகேயனா, அஜித்தா என்பது மே ஒன்றாம் தேதி படம் வெளியானால் தெரியும்.

Trending News