கோலிவுட்டில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி, படிப்படியாக முன்னேறி, தனது விடாமுயற்சியால் முன்னணி நடிகராக மாறியவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன். அதேபோல் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடிகராகவும் சிவகார்த்திகேயன் இருக்கிறார். இதற்கு காரணம் இவருடைய ஹ்யூமர் சென்ஸ் தான்.
தற்போது சிவகார்த்திகேயனின் நடிப்பில் ‘அயலான்; என்ற திரைப்படம் உருவாகி கொண்டிருக்கிறது. மேலும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான இந்தப் படத்தை ரவிக்குமார் இயக்கி வருகிறார். இந்தப் படம் வருகின்ற மே மாதம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் அயலான் படத்தை முடித்த கையோடு, தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனரான ஏ ஆர் முருகதாஸ் உடன் கூட்டணி போட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது அயலான் படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும், மீதி வேலைகள் ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக விளங்குபவர் தான் ஏ ஆர் முருகதாஸ். இவரது இயக்கத்தில் ஒருமுறையாவது நடிக்க வேண்டும் என்பது பல வளரும் நடிகர்களின் இலட்சியமாக உள்ளது.
இவ்வாறிருக்க சிவகார்த்திகேயன் அடுத்ததாக முருகதாஸ் உடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனை அறிந்த சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருவதோடு, தங்களது வாழ்த்துகளை சமூக ஊடகங்களின் வாயிலாக தெரிவித்து வருகின்றனராம்.