சிங்கம் போல் கர்ஜிக்க தயாரான சூப்பர் ஸ்டார்.. தோல்வி பயத்தால் சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவு

திரையுலகை பொறுத்தவரையில் சூப்பர் ஸ்டாருக்கு என்று ஒரு தனி மவுசு இருப்பது அனைவருக்கும் தெரியும். அதனாலேயே அவர் பற்றிய எந்த செய்தி வெளிவந்தாலும் அது மிகப்பெரிய அளவில் வைரலாகி விடுகிறது. அப்படித்தான் இப்போது இவருடைய ஒரு அதிரடியை பார்த்து சிவகார்த்திகேயன் அரண்டு போய் இருக்கிறாராம்.

இந்த விஷயம் தான் இப்போது சோசியல் மீடியாவில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது ரஜினி இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல மாதங்களாகவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இப்படத்திலிருந்து ஏதாவது ஒரு அப்டேட் வராதா என ரசிகர்கள் அனைவரும் தவம் கிடக்கிறார்கள்.

Also read: மாமனார் மாதிரி மேடையில் பேசினால் மட்டும் போதுமா.? அட்டூழியம், தயாரிப்பாளரை அழ வைக்கும் தனுஷ்

அதனாலேயே தயாரிப்பு நிறுவனம் இன்று மாலை ஒரு தரமான அப்டேட்டை வெளியிட உள்ளனர். மேலும் அது நிச்சயம் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு தான் என்று இப்போது ரசிகர்கள் கணித்துள்ளனர். இதுதான் தற்போது சிவகார்த்திகேயனுக்கும் பெரும் பிரச்சனையாக மாறி இருக்கிறது.

ஏனென்றால் அவரின் நடிப்பில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சன் பிக்சர்ஸ் ஜெயிலர் படத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். ஏனென்றால் சனி, ஞாயிறு தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விடுமுறையும் இருப்பதால் அதிலேயே கலெக்சனை பார்த்து விடலாம் என்று படக்குழுவினர் பிளான் போட்டிருக்கிறார்கள்.

Also read: போதாது போதாது என சம்பாதித்ததை மொத்தமாக தொலைத்த 5 நடிகர்கள்.. தனக்குத்தானே குழி வெட்டிய ரஜினி

அதற்கான வேலைகள் தான் இப்போது ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது. இதனால் சிவகார்த்திகேயன் தற்போது தோல்வி பயத்தில் அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளார். ஏனென்றால் சிங்கம் போல் கர்ஜிக்க தயாராகும் சூப்பர் ஸ்டாரை எதிர்த்து களத்தில் இறங்குவது அவ்வளவு புத்திசாலித்தனம் கிடையாது என்பதை அவர் நன்றாகவே உணர்ந்து இருக்கிறார்.

அதனாலேயே தற்போது மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதியை பட குழு மாற்றும் முடிவில் இருக்கின்றனர். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் வெளிவர இருந்த இப்படம் ஒரு மாதத்திற்கு முன்பாக அதாவது ஜூலை மாதமே வெளியாக இருக்கிறதாம். இதன் மூலம் சோலோவாக இறங்கி கலெக்சனை அள்ள சிவகார்த்திகேயன் திட்டமிட்டிருக்கிறார். இது குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு இப்போது படக்குழு ஆயத்தமாகி கொண்டிருக்கிறது.

Also read: ரஜினியால் படாதபாடு படும் ரோஜா.. பொது இடத்தில் முத்தமிட்டதால் கிளம்பிய அடுத்த சர்ச்சை