திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வளர்த்த இயக்குனரை மிதித்த சிவகார்த்திகேயன்.. வேறு வழியின்றி விஷால் இடம் அடைக்கலம்.!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருகிறார். அதற்கான காரணம், அவரது விடாமுயற்சி, கடின உழைப்பு, திறமை என இருந்தாலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதும் ஓர் காரணமே. என்னதான் திறமைகள் இருந்தாலும், ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் தான் அந்த நடிகரால் வெள்ளித்திரையில் ஜொலிக்க முடியும்.

அந்த வகையில் தனுஷின் 3 படத்தில், தனுஷின் நண்பனாகவும், காமெடியனாகவும் நடித்து வெள்ளித்திரையில் சிவகார்த்திகேயன் கால்பதித்தார். தொடர்ந்து சிவகார்த்திகேயன் பல படங்களில் நடித்து வரும் நிலையில், தனுஷுக்கும், இவருக்கும் இடையே சில மன வருத்தங்கள் ஏற்பட்டு இருவரும் எதிரிகளாக மாறியுள்ளனர். இதில் சிவகார்த்திகேயன் அவ்வப்போது மறைமுகமாக தனுஷை சீண்டி பார்த்து வருகிறார்.

Also Read: ஒரு கல்லுல ரெண்டு மாங்காவை அடிக்க நினைக்கும் சிவகார்த்திகேயன்.. கமலை வைத்து கல்லா கட்ட திட்டம்

உதாரணமாக தனுஷின் அலுவலகம் எதிர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் அவருடைய அலுவலகத்தை அமைத்துள்ளார். மேலும் தனுஷின் கேப்டன் மில்லர் படத்துடன் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தையும் ரிலீஸ் பண்ண உள்ளார். இப்படி வளர்த்து விட்டவருக்கு போட்டியாக சிவகார்த்திகேயன் இதுபோல செய்வது சரியானதல்ல என பலரும் அவரை திட்டி வருகின்றார்.

இதுபோதாது என சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்த இயக்குனரையே தற்போது மதிக்காமல் உள்ளதால் அவர் நடிகர் விஷாலிடம் தஞ்சமடைந்துள்ள செய்தி வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன், ஓவியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மெரினா படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் பாண்டிராஜ். இவர் தமிழில் பசங்க, கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

Also Read: வளர்த்து விட்ட காரணத்துக்காக பொறுத்து போகும் தனுஷ்.. ஓவர் வெறுப்பேற்றிய சிவகார்த்திகேயன்

இந்த நிலையில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து, மெரினா உள்பட கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதனிடையே சூர்யாவின் எதற்கும் துணிந்தான் திரைப்படம் தோல்வியடைந்த நிலையில், அடுத்த வெற்றிப் படத்தை கொடுக்க இயக்குனர் பாண்டிராஜ், சிவகார்த்திகேயனை மீண்டும் அணுகியுள்ளார். ஆனால் பாண்டிராஜனை சிவகார்த்திகேயன் ரொம்ப நேரம் காக்க வைத்து விட்டு, அவரது கதையை கேட்காமலே அவரை வழியனுப்பி உதாசீனப்படுத்தியுள்ளார்.

இப்படி தான் வளர்த்த நடிகர் தன்னை மதிக்காமல் போய்விட்டதால் இந்த கதையை அப்படியே நடிகர் விஷாலை சந்தித்து கூறியுள்ளார். விஷாலுக்கு அவர் சொன்ன பிடித்துப்போக உடனே படம் பண்ணலாம் என விஷால் கால்ஷீட் கொடுக்க முடிவு செய்துள்ளாராம். நடிகர் சிவகார்த்திகேயன் முதலில் தனுஷை மதிக்காமல் இருந்த நிலையில், தற்போது ஹீரோவாக்கிய இயக்குனரையே உதாசீனப்படுத்தியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

Also Read: கடனை கொடுக்காமல் வாய்ச்சவடால் விடும் விஷால்.. கொந்தளித்து போய் லைக்கா எடுத்த அஸ்திரம்

Trending News