தொடர் தோல்வியில் சிக்கிய சிவகார்த்திகேயனின் சினிமா மார்க்கெட்டை மீட்டெடுக்க உதவியது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் தான். இதை சிவகார்த்திகேயனே மறுக்கமாட்டார்.
அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் படங்கள் சன் டிவியில் நல்ல டிஆர்பி பெறுவதால் சன் நிறுவனத்திற்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஒரு நல்ல கனெக்சன் இருந்து வருகிறது. இதனால் தன்னுடைய படங்களை அதிக விலைக்கு சன் டிவிக்கு விற்பனை செய்து வந்தார்.
அப்படித்தான் டாக்டர் படத்தை அறிவித்தபோதே சன் நிறுவனத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொகைக்கு விற்றுவிட்டார் சிவகார்த்திகேயன். டாக்டர் படத்தை சிவகார்த்திகேயன் தன்னுடைய எஸ்கேப் புரோடக்சன்ஸ் மூலம் சொந்தமாக தயாரிக்கிறார் என்பதும் கூடுதல் தகவல்.
இந்நிலையில் தற்போது தியேட்டரில் டாக்டர் படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் நேரடியாக ஓடிடி வெளியீட்டுக்கு சென்றுள்ளனர். பல நிறுவனங்களிடம் பேசிய நிலையில் கடைசியாக ஹாட் ஸ்டார் நிறுவனம் கொடுத்த ஆஃபர் படக்குழுவை திருப்திபடுத்தியுள்ளது.
ஆனால் அவர்கள் ஒரு கண்டிஷன் போட்டுள்ளனர். ஓடிடியோடு சேட்டிலைட் உரிமையும் சேர்த்து கொடுத்தால் நினைத்து பார்க்காத அளவுக்கு விலை கொடுப்பதாகவும் கூறியிருந்தனர். இதனால் நல்ல லாபம் கிடைக்கிறது என சன் நிறுவனத்திடம் கொடுத்த டாக்டர் படத்தின் சாட்டிலைட் உரிமையை திரும்ப கேட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
ஆனால் சன் நிறுவனமோ, நாங்க என்ன பேங்க்கா நடத்துறோம், நினைத்த நேரம் பணத்தைப் போட்டு எடுக்க என டாக்டர் படத்தை கொடுக்க மறுத்து விட்டார்களாம். நல்ல டிஆர்பி கிடைக்கும் படங்களை விட்டுக்கொடுக்க அவர்கள் என்ன லூசா என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.
இதனால் சிவகார்த்திகேயன் மற்றும் சன் பிக்சர்ஸ் ஆகிய இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு விட்டதாக தெரிகிறது. சரி, சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடலாமா என்று பேசியபோது சன் நிறுவனம் டாக்டர் படத்தை அடிமாட்டு விலைக்கு கேட்டதாக செய்திகள் வந்துள்ளன.