தளபதி விஜய்யால் சத்தமில்லாமல் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் அதிகரித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் காதைக் கடிக்கின்றனர். விஜய் பெயரை பயன்படுத்தி செம வேலையை செய்து நன்றாக கல்லா கட்டிவிட்டாராம் சிவகார்த்திகேயன்.
அடுத்த விஜய் என்கிற ரேஞ்சுக்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். மேலும் இன்றைய தேதியில் முன்னணி நடிகர்களை தாண்டி குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் பெரும்பாலும் சிவகார்த்திகேயன் படத்திற்கு தான் வருகின்றனர்.
இதனாலேயே தன்னுடைய மார்க்கெட் உயர்ந்து தற்போது சம்பளத்திலும் முன்னணியில் உள்ளார். மேலும் சில வருடங்களுக்கு முன்பு தயாரிப்பு தரப்பில் சில கசப்பான அனுபவங்களை சந்தித்த சிவகார்த்திகேயன் சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களை சொந்தமாகவும் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்.
அந்தவகையில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் சேர்ந்து நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தை தயாரித்திருந்தார். ஹீரோவாகவும் தயாரிப்பாளராகவும் இந்த படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு சிவகார்த்திகேயனுக்கு அதிகமாக இருந்தது.
ஏற்கனவே டாக்டர் படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திற்கு விற்பதாக பேச்சுவார்த்தை வந்த நேரத்தில் தான் விஜய் மற்றும் நெல்சன் இணையும் தளபதி 65 படத்தின் அறிவிப்பு வெளியானது. இதனால் உற்சாகமடைந்த சிவகார்த்திகேயன், விஜய் பட இயக்குனர்தான் இந்த படத்தை இயக்கி உள்ளார் என பிளேட்டை மாற்றிவிட்டாராம்.
இதனால் டாக்டர் படத்தின் வியாபாரமும் பல மடங்கு உயர்ந்து விட்டதாம். நினைத்ததை விட அதிக விலைக்கு விற்று விட்ட சந்தோஷத்தில் உள்ளாராம் சிவகார்த்திகேயன். மேலும் டாக்டர் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
