சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சிவகார்த்தியன் திரை வாழ்க்கையில் மிக முக்கிய படமாகப் பார்க்கப்பட்டது.
இப்படத்திற்கு பிறகு தான் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்குப் பிறகு பொன்ராம் உடன் இணைந்து ரஜினி முருகன் மற்றும் சீமராஜா போன்ற படங்களில் நடித்திருந்தார்.
சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 பாகத்தில் நடிப்பார் என பலரும் கூறி வந்தனர். இதனை சிவகார்த்திகேயனும் வெளிப்படையாக கூறியிருந்தார். ஆனால் பொன்ராம் அவரது ட்விட்டர் பக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 பாகத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க மாட்டார் இளம் நடிகர்கள் யாராவது ஒருவர் தான் நடிப்பார்.

சிவகார்திகேயன் சார் maturity ஆகிவிட்டார், அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் எடுப்போம். போட்றா வெடிய என பதிவிட்டுள்ளார். பொன்ராம் சசிகுமார் வைத்து எம்ஜிஆர் மகன் என்னும் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கு பிறகு பொன்ராம் மீண்டும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 பாகத்தை எடுக்க திட்டமிட்டு உள்ளதாக ஒரு சிலர் கூறி வருகின்றனர். அதற்காக தான் தற்போது ட்விட்டர் பக்கத்தில் இதனை பற்றிய தகவலை பதிவிட்டுள்ளார். கூடிய விரைவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 பாகத்தை இயக்குவார் என அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்.