வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

போதையில் கதை கேட்கும் நடிகர்.. கூட நின்று போட்டோ எடுக்க ஆசைப்பட்ட சிவகார்த்திகேயன்

Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் வளர்ச்சி அபரிவிதமான ஒன்று. சின்னத்திரையில் இருந்த பல பிரபலங்கள் வெள்ளித்திரையில் கால் பதித்திருந்தாலும் சிவகார்த்திகேயன் அளவுக்கு வெற்றி பெற்றவர்கள் சிலர் தான். இப்போது டாப் 10 நடிகர்களின் வரிசையில் சிவகார்த்திகேயனும் இடம்பெறுகிறார்.

இந்நிலையில் ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் இருந்தபோது சில படங்களின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக சிவகார்த்திகேயன் பணியாற்றி உள்ளார். அப்போது ஒரு நடிகருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் பெரிதும் ஆசைப்பட்டிருந்தாராம். ஆனால் இப்போது அந்த நடிகர் இருக்கிற இடமே தெரியாமல் போய்விட்டார்.

Also Read : வாய்ப்பு வேணும்னா படுக்கைக்கு வா.. சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்த பெரிய மனுஷன்

அதாவது மிகக் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் விமல். இவருடைய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சில கெட்ட பழக்கத்தினால் கேரியரை தொலைத்து விட்டார். அந்த வகையில் விமல் எப்போதுமே போதையில் தான் கதை கேட்பார் என வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.

அதாவது தனக்கு கம்பெனி யாராவது கொடுக்க வேண்டும் என்பதற்காக கதை சொல்ல வருபவர்களை காரில் அழைத்துக் கொண்டு சுற்றுவார். பின்பு குறிப்பிட்ட பணத்தை கொடுத்து விட்டு உங்கள் படத்தில் நடிக்கிறேன் என்று டீலில் விட்டு விடுவார். மேலும் போதையில் இருக்கும் போது எதில் கையெழுத்து போட்டோம் என்று தெரியாத அளவுக்கு சில படங்களில் ஒப்பந்தமானார்.

Also Read : மனைவிக்கு வித்தியாசமாக திருமண வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்.. சமூகவலைத்தளங்களில் வைரலாகும் கியூட் போஸ்ட்

இதை அடுத்து விமல் கடனால் அவதிப்பட்டார். இவ்வாறு அடுத்தடுத்த பிரச்சனையால் இப்போது ஒரு தெளிவு பெற்று இருக்கிறார். விமலை பொறுத்தவரையில் ஒரு சிறந்த நடிகர் என்பது யாராலும் மறுக்க முடியாது. களவாணி படத்தில் அவரைப் போல ஒரு எதார்த்தமான நடிப்பை யாராலும் கொடுத்திட முடியுமா.

இப்படி இருந்த விமல் சில காரணங்களினால் தொடர் பிளாப் கொடுத்த நிலையில் இப்போது ஒரு நல்ல கதையை தேர்வு செய்து நடித்திருக்கிறாராம். இந்த படம் மட்டும் விமல் நினைத்தது போல வெற்றி பெற்றால் மீண்டும் தனது மார்க்கெட்டை பிடிப்பார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. விமல் ரசிகர்களும் அதற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read : அக்கட தேசத்து இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா.. தனுஷ், சிவகார்த்திகேயன் வரிசையில் சிக்கிடாதீங்க!

Trending News