செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

மகேஷ் பாபுவுக்கு போட்டியாக ஆசைப்படும் சிவகார்த்திகேயன்.. பல நாட்களாக போட்ட ஸ்கெட்ச்

சிவகார்த்திகேயன் தற்போது வரிசையாக நான்கைந்து படங்களில் கமிட்டாகியிருக்கிறார். டான் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அவர் தற்போது ராஜ்கமல் பிலிம்சுக்கு ஒரு படம் பண்ண இருக்கிறார்.

அதை தொடர்ந்து இன்னும் பல முன்னணி நிறுவனங்களும் அவரை வைத்து படம் தயாரிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் அவர் தற்போது டூரிஸ்ட் கைடு கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் படத்திற்கு பிரின்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கின்றது. இதில் படத்திற்கு இப்படி ஒரு பெயர் வைத்ததற்கு பின் பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது சிவகார்த்திகேயனுடன் ஆர் டி ராஜா நட்பாக இருக்கும் பொழுது அவருக்கு பிரின்ஸ் என்றுதான் அடைமொழி கொடுத்து வந்தாராம்.

அதேபோன்று ட்விட்டர் பக்கத்தில் எல்லாம் அவருடைய மெசேஜ்கள் பிரின்ஸ் என்ற பெயரில் தான் வருமாம். மேலும் அவருக்கு எப்படியாவது தமிழ் சினிமாவில் பிரின்ஸ் என்ற அடைமொழியை கொடுத்துவிட வேண்டும் என்று பல வேலைகளை அவர்கள் செய்தனர்.

ஆனால் அவர்கள் இருவரும் மன வருத்தத்தின் காரணமாக பிரிந்த போது அந்தப் பெயரும் அப்படியே மறைந்து போய்விட்டது. இப்பொழுது அந்த பெயரை மீண்டும் அடைமொழியாக வைக்கும் முயற்சியில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டு வருகிறாராம்.

அதற்காகத்தான் டான் படத்தில் கூட பிரின்ஸ் என்ற ஒரு பாடலை வைத்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்திற்கும் அதே பெயரை டைட்டிலாக வைத்து இருக்கின்றனர். இதன் மூலம் சிவகார்த்திகேயன் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு போட்டியாக இந்தப் பெயரை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர் மகேஷ் பாபுவிற்கு பிரின்ஸ் என்ற அடைமொழி தான் கொடுக்கப்பட்டு வருகிறது. அதே போன்று தமிழிலும் தன்னுடைய பெயர் இடம்பெற வேண்டுமென்று சிவகார்த்திகேயன் ஆசைப்படுவதாக பலரும் கூறி வருகின்றனர்.

Trending News