ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விஷ்ணு, சூரிக்கு இடையே சண்டையை தூண்டி விட்ட 3வது நபர்.. அட இதுக்கும் SK தான் காரணமா?

Actor Sivakarthikeyan: நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி கேரக்டரில் வரும் கருணாஸ் ஒரு கோர்ட் சீனில் ஜட்ஜ் ஐயா வீட்டில் உள்பாவாடை காணாமல் போனால் கூட அந்த கேசை என் மேல தான் போடுறாங்க என காமெடியாக சொல்லி இருப்பார். அப்படித்தான் இப்போது சிவகார்த்திகேயனின் நிலைமை ஆகிவிட்டது. கோலிவுட்டில் எந்த பிரச்சனை நடந்தாலும் அதற்கு சிவகார்த்திகேயன் தான் காரணமாக இருப்பார் என முத்திரை குத்தப்பட்டு விடுகிறது.

சில மாதங்களுக்கு முன் இசையமைப்பாளர் இமான் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்வதற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்றும், அவர் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார் என்றும் பேசியிருந்தார். குழந்தைகள் எதிர்காலம் கருதி நான் வேறு எந்த விஷயத்தையும் வெளியில் சொல்ல மாட்டேன் என இமான் முற்றுப்புள்ளி வைக்க, பலரும் விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் அதற்கு கண்ணு, காது, மூக்கு வைத்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த பிரச்சனையே முடியாத நிலையில் அடுத்து ஒரு மிகப்பெரிய விஷயத்தில் சிவகார்த்திகேயனின் தலை உருளுகிறது. நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரிக்கு இடையே நீண்ட வருடங்களாக பிரச்சனை நடந்து வருவதும், அந்த கேஸ் கோர்ட்டில் நடந்து கொண்டிருப்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். விஷ்ணு விஷால் மற்றும் சூரி இருவரும் நீண்ட வருடங்களாக நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில், ஒரு நிலம் வாங்கும் தகராறில் இருவருக்கும் மன கசப்பு ஏற்பட்டது.

Also Read:ஓவர் பில்டப் கொடுக்கும் சிவகார்த்திகேயன்.. இது எல்லாம் எங்க போய் முடிய போகுதோ!

விஷ்ணு விஷாலின் அப்பா மீது சூரி புகார் கொடுத்ததால், அந்த சமயத்தில் விஷ்ணு விஷால் சூரியை பற்றி சரமாரியாக விமர்சித்து இருந்தார். இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தையே இல்லாமல் போனது. சமீபத்தில் விஷ்ணு விஷால் நடித்த லால் சலாம் படம் ப்ரோமோஷனுக்காக ஒரு இன்டர்வியூக்கு சென்றிருந்தார். அப்போது அவரிடம் சூரி உடனான பிரச்சனை பற்றி கேட்கப்பட்டது. அப்போது சமீபத்தில் இருவரும் சந்தித்து பேசி விட்டதாகவும், எல்லா கருத்து வேறுபாடுகளும் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.

இதுக்கும் SK தான் காரணமா?

நாங்கள் இருவரும் மனம் விட்டு பேசும் பொழுது தான் ஒரு விஷயம் புரிந்தது. எங்கள் நட்புக்குள் மூன்றாவது நபர் ஒருவர் விளையாடி இருக்கிறார். நட்புக்குள் மூன்றாவது நபரை உள்ளே விடக்கூடாது என்பதை நான் புரிந்து கொண்டேன் என்று சொல்லி இருக்கிறார். இந்த பேட்டி வெளியானதிலிருந்து யார் அந்த மூன்றாவது நபர் என்பதை அலசி ஆராய ஆரம்பித்து விட்டார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள்.

சினிமாவில் நடிகர் சூரிக்கு நெருக்கமான நண்பர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். விஷ்ணு விஷால் அந்த பேட்டியில் சொன்ன மூன்றாவது நபர் சிவகார்த்திகேயனாக இருப்பாரோ என்ற சந்தேகம் இப்போது எல்லோருக்குமே எழுந்திருக்கிறது. ஏற்கனவே கணவன் மனைவியை பிரித்து விட்டார் என்ற பஞ்சாயத்து அவர் மேல் போய்க் கொண்டிருக்கிறது. இதுபோன்ற சமயத்தில் விஷ்ணு விஷால் மற்றும் சூரிக்கு இடையேயான நட்பையும் இவர்தான் பிரித்திருப்பாரோ என்ற பழியும் இவர் மீது விழுந்திருக்கிறது.

Also Read:சிவகார்த்திகேயனுக்கு வசூலை அள்ளிக் கொடுத்த 5 படங்கள்.. வெளிப்படையாக சொன்ன உதயநிதி

Trending News